தேவையானவை :
கொய்யாக்காய் – 2 (அவித்தது)
எலுமிச்சம்பழ சாறு – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையானளவு
கடுகு – சிறிதளவு
மிளகாய்த்தூள் – அரைடீஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
லெமன் உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை
1.அவித்த கொய்யாக்காயை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போடவும்.அதனுடன் மிளகாய்த்தூள்,லெமன் உப்பு,எலுமிச்சம்பழ சாறு,உப்பு,கடுகு,எண்ணெய் ஆகியவற்றைப் போட்டு கரண்டியினால் நன்றாக கலக்கவும்.கலந்த பின்பு சுத்தமான சுவையான கொய்யாக்காய் ஊறுகாய் தயாராகிவிடும்.