Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் கூடுதல் சிறப்புடன் இன்று.. பத்மநாபா ஏகாதசி!

கூடுதல் சிறப்புடன் இன்று.. பத்மநாபா ஏகாதசி!

padbhanabhar
padbhanabhar

புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசிக்கு பாபங்குச ஏகாதசி எனப் பெயர். இந்த ஏகாதசி விரதம் இரு விதமான நன்மைகளை தர வல்லது. ஒன்று முக்தியாகும். மற்றொன்று இந்த உலக வாழ்வில் சுகமும் வளமும் ஆகும்.

பாபங்குச ஏகாதசி விரதம் பத்மநாப ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும்.

ஏகாதசி விரதம் இருந்து விஷ்னு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேஷமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும். எனவே பெருமாளுக்குகந்த மாதமான புரட்டாசியில் வரும் பரிவர்தனா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி மற்றும் சயனி ஏகாதசியன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராணம் செய்து பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அனுகிரஹத்தை பெருவதோடு நீரினால் ஏற்படும் துயரங்களில் இருந்து விடுபடலாம்.

இன்று கூடுதல் சிறப்பாக புரட்டாசி மாதப்பிறப்பு, பெருமாளின் நட்சத்திரமான திருவோணம் வாமன ஜெயந்தி சேர்ந்து வருகிறது. இந்நாளில் உபவாசம் இருப்பது சிறந்த பலன்களைப் பெற்றுத்தரும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version