― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்நம்பியவர்க்கு நண்பன்: கள்வனுக்கு காட்சியளித்த கண்ணபிரான்!

நம்பியவர்க்கு நண்பன்: கள்வனுக்கு காட்சியளித்த கண்ணபிரான்!

- Advertisement -
krishnar

தினமும் காலையில் ஒரு அந்தணரின் வீட்டு திண்ணையில் அமர்ந்து ஸ்ரீனிவாச அய்யர் கிருஷ்ணனின் பாகவத கதையை உபன்யாசம் செய்து வந்தார் ,,,,இதை அவ்வூரில் உள்ள அனைவரும் கேட்டு ரசித்து வந்தனர் ,,,,அவ்வூரின் தலைவரும் அதை விருப்பத்துடன் கேட்டு ரசித்து வந்தார் ,,,,,

ஒரு நாள் இவர் உபன்யாசத்தில் கிருஷ்ணனும் ,,,பலராமனும் ,,,,பசுக்களை மேய்த்து வரும் கதையை கூறி உபன்யாசம் செய்தார் —-கிருஷ்ணன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் ,,,பலராமன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் பற்றியும் அழகாக வர்ணித்து அன்றைய உபன்யாசத்தை பற்றி முடித்து கிளம்ப ஆயத்தமானார் ,,,,

சிறிது தூரம் நடந்திருப்பார் ,,,,ஹோய் அய்யரே சற்று நில்லும் என்று குரல் ஒரு மரத்தின் மறைவில் இருந்து வந்தது ,,, ஸ்ரீனிவாச அய்யரும் நின்று அழைத்தது யார் என்று பார்த்தார் ,,,,

கையில் கத்தியுடனும்,,,ஒட்டிய வயிறுடனும் திருடன் ஒருவன் நின்றிருந்தான் ,,, ஸ்ரீனிவாச அய்யர் அதிர்ச்சியாகி ஓட எத்தனிக்க திருடன் அவரை பிடித்து மரத்தின் மறைவுக்கு அழைத்து சென்று அவரின் கழுத்தில் கத்தியை வைத்து ,,,சத்தம் போடாமல் நான் கேட்பதற்கு மட்டும் பதில் கூறும் ,,

உம்மிடம் பொருள் ஏதும் இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் சற்று முன் இரு சிறுவர்கள் பல நகைகள் அணிந்து மாடு மேய்க்க வருவதாக சொன்னீரே ,,,,அவர்கள் எங்கே வருவார்கள் என்று சொல்லும் உம்மை விட்டு விடுகிறேன்.

ஸ்ரீனிவாசஅய்யர் உள்ளுக்குள் சிரித்து கொண்டே பாகவத -கண்ணன் கதையை நிஜம் என்று நம்பிவிட்டான் போல இவன் —–இப்போது இவனிடம் இருந்து தப்பிக்க கதையை நிஜம் போல் காட்டிக்கொள்ள வேண்டியதுதான் ,,,

அப்பா —–இங்கிருந்து எட்டு மைல் கல் தூரம் நடந்து சென்றால் ஒரு காடு வரும் அங்கே தான் அந்த சிறுவர்கள் வருவார்கள் இப்போது உச்சி வெயில் தொடங்க போகிறது அவர்கள் வரும் சரியான நேரம் இதுதான் ,,நீ உடனே கிளம்பி சென்றால் உனக்கு நல்ல வேட்டைதான் இன்று என்று அவனை தூண்டி விட்டார் ஸ்ரீனிவாசஅய்யர்.

திருடன் நல்லது அய்யரே நான் இப்பொழுதே கிளம்புகிறேன் நீ கூறியதை பார்த்தால் அவர்களிடம் நிறைய நகைகள் இருக்கும் போல் தெரிகிறது. அய்யரே…. நான் திருடும் நகைகளில் உமக்கு ஏதும் பங்கு வேண்டுமா என்று கேட்டான் ,,,,

ஸ்ரீனிவாசஅய்யர் —ஐயோ அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் எல்லாம் நீயே வைத்துக்கொள் ,,,இப்போதைக்கு நீ என்னை விட்டால் போதும் என்றார் ,,,,திருடனும் அவருக்கு நன்றி கூறி விட்டுவிட்டு ,,,,அவர் சொன்ன காட்டை நோக்கி விரைந்தான் ,,,,,

காட்டை அடைந்து ஒரு மரத்தின் ஓரம் அமர்ந்து சிறுவர்கள் வரவுக்காக காத்திருந்தான் ,,,,,சில நிமிடங்கள் கழிந்ததும் பசு கூட்டங்களை மேய்த்த படி கண்ணனும் பலராமனும் சிரித்து பேசிக்கொண்டு வந்தனர் ,,,,அதை பார்த்ததும் திருடனுக்கு சந்தோசம் அய்யர் ஏமாற்றவில்லை நம்மை அவர் கூறியது போல் சூரியனை போல் மின்னும் நகைகளை அணிந்து வந்திருக்கிறார்களே இந்த சிறுவர்கள் ,,,,

நகைகள் அணிந்திருப்பதால் இப்படி ஒளி வீசுகிறதா அவர்களிடம் அல்லது அவர்களின் உடம்பில் இயற்கையிலே இப்படி ஒளி வீசுமா …..சரி வந்த வேலையை பார்ப்போம் என்று கத்தியுடன் அவர்கள் முன் போய் நின்றான் திருடன் ,,,

திருடனை பார்த்த கண்ணன் ஐயோ அண்ணா திருடன் எனக்கு பயமா இருக்கு என்று கண்களை மூடிக்கொண்டான் மாய கண்ணன் ,,,,பலராமன் —-என்னது திருடனா ஐயோ நீ சொன்னதை கேட்டதும் எனக்கு உடல் நடுங்குகிறதே என்றான் பலராமன் ,,,,

திருடன் –அட இருவரும் இப்படி பயந்தாங்கோலிகளாக இருக்கிறார்களே நாம் வந்த வேளை சுலபமாக முடியும் போல் உள்ளதே ,,,,,ஹே சிறுவர்களே எனக்கு தேவை நீங்கள் அணிந்திருக்கும் நகைகள் தான் ஒழுங்காக நகைகளை கழட்டி நான் காட்டும் துணியில் போட்டு விட்டால் நான் வந்த வழியே போய் விடுவேன் இல்லை குத்தி விடுவேன் கத்தியால் என்றான் ,,

அவர்கள் பயந்துகொண்டே ஐயோ வேண்டாம் நாங்கள் நகைகளை தருகிறோம் ,,என்று நகைகள் அனைத்தையும் கழட்டிக்கொடுத்தனர்,,,,அவைகளை ஒரு மூட்டையாக கட்டிய திருடன் கிளம்ப ஆயுத்தமானான்,,,,

அப்போது கண்ணன் நண்பனே நில் உன்னை பார்த்தால் வெகுநாட்களாக சரியாக சாப்பிடாதவன் போல் தெரிகிறது இந்தா நாங்கள் கொண்டுவந்த உணவை சாப்பிட்டு விட்டு செல் என்றனர் ,,,,திருடனும் பசியோடு இருந்ததால் உணவை வாங்கி வாயில் வைக்க போனான் ,,,பின் அப்படியே உணவை வைத்து சாப்பிடாமல் உணவை பார்த்துக்கொண்டே கண்ணீர் விட்டான் ,,,,

அப்போது கண்ணன் மெதுவாக என்ன நண்பா உணவு சூடாக இருக்கிறதா என்றான் ,,,,திருடன் கண்ணீருடன் இல்லை எனக்கு உங்களை போலவே இருமகன்கள் இருக்கிறார்கள் தினமும் நான் வீட்டை விட்டு கிளம்பும்போது ஒட்டிய வயிற்றுடன் அப்பா பசி தாங்க முடியவில்லை இன்றாவது உணவுடன் வாருங்கள் என்று அழுவார்கள் அவர்கள் ஞாபகம் வந்து விட்டது அதான் என்று அழுதான் ,,,

கண்ணன் திருடனின் தலையை வருடினான் ,,,அவ்வளவுதான் அந்த திருடனின் உடம்பில் எதோ சக்தி கிடைத்தது போல் இருந்தது உடனே எழுந்து சிறுவர்களே நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை இதுவரை என் மனதில் இருந்த திருட்டு எண்ணமெல்லாம் மறைந்து போய் போய் விட்டதே இப்போது ,,,,இந்தாருங்கள் உங்கள் பொருள் எனக்கு எதுவும் வேண்டாம் நான் இனி உழைத்து என் குடும்பத்தின் வறுமையை போக்கி கொள்கிறேன் ,,,என்று கிளம்பினான் ,,,,,

நில் நண்பனே என்று அவனை தடுத்த கண்ணன் உனக்கு நகைகள் வேண்டாம் என்று கூறிவிட்டாய் சரி பாவம் உனக்கு வழி காட்டிய அந்த ஸ்ரீனிவாச அய்யர் மிகவும் கஷ்டப்படுகிறாரே அவரிடம் இந்த நகைகளை கொடுத்து விடு என்றனர் ,,,,

திருடனும் சரி, சரியான யோசனை தான் ஆனால் அவரது இல்லம் எங்கு இருக்கிறது என்று எனக்கு தெரியாதே நான் எப்படி அவரிடம் இதை கொடுப்பது என்றான் ,,,,கண்ணன் –கவலை வேண்டாம் நான் வழி சொல்கிறேன் நீ கொடுத்துவிட்டு வா ,,ஒரு வேளை அவர் நகைகள் வேண்டாம் என்றால் என்னிடம் அழைத்து வா நான் அவரை சம்மதிக்க வைக்கிறேன் ,,,,,

திருடனும் சரி என்று கூறிவிட்டு கண்ணன் கூறிய வழியை வைத்து ஸ்ரீனிவாசஅய்யரின் இல்லம் வந்து சேர்ந்தான் ,,,,அய்யரை சந்தித்து நடந்ததை கூறினான் ,,,அய்யர் சிரித்து கொண்டே அட போப்பா நான் ஆச்சாரப்படி வாழ்ந்து அனுதினமும் கண்ணனுக்கு பூஜை செய்து ,,,,அவனது கதைகளை கூறிவருகிறேன் என் கண்ணுக்கே இதுவரை அவன் தென்படவில்லை

நீ அவனை பார்த்தேன் என்கிறாயே உனக்கு பொருள் கிடைக்காத விரக்தியில் மூளை பிசகிவிட்டது கிளம்பு பா நீ என்னிடம் பொருள் ஏதும் இல்லை ,,,,ஐயோ ஸ்வாமி நான் சொல்றத நம்பலைனா—- இங்க பாருங்க நீங்க சொன்ன அத்தனை நகைகளும் இதுல இருக்கு நீங்க சொன்ன சிறுவர்களின் அங்க அடையாளம் சொல்றேன் கேளுங்க என்று கண்ணன் -பலராமன் — அடையாளங்களை சொல்லி நகைகளையும் காட்டினான் திருடன் ,,,

அவன் கூறிய அடையாளங்களை கேட்டும் நகைகள் அனைத்தையும் பார்த்த அய்யர் திகைத்து எல்லாம் சரியாக சொல்கிறானே ஒரு வேளை உண்மையில் கண்ணனை பார்த்திருப்பானோ சரி இவனுடன் போய் பார்த்துவிடுவோம் எதற்கும் துணைக்கு இவ்வூர் தலைவரையும் அழைத்து செல்வோம் என்று அவரையும் அழைத்து காட்டுக்குள் சென்றனர் மூவரும் ,,,,

அங்கே காடு வெறிச்சோடி இருந்தது யாருமே இல்லை ,,, ஸ்ரீனிவாசஅய்யரும் ,,,ஊர்தலைவரும் திருடனை நம்பாத பார்வை பார்த்தனர் ,,,,,ஊர்த்தலைவர் —ஏண்டா எங்கயோ கோயிலில் நகையை கொள்ளையடித்து விட்டு ,,,,கண்ணன் கொடுத்தான் என்று கதையா விடுகிறாய்

உன்னை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தால்தான் உண்மை வெளிவரும் என்றார் கோபமாக ,,,,,திருடன் மண்டியிட்டு ,,,,சிறுவர்களே என்னை நண்பா என்று எவ்வளவு உரிமையுடன் அழைத்தீர்கள் அன்பாக உணவு கொடுத்து உபசாரம் செய்திர்கள் ,,,,இதுவரை திருட்டுத்தொழிலை குல தொழிலாக செய்து வந்த என் மனதை மாற்றி என்னை அறிய செய்திர்களே ,,,இப்போது எங்கு போனீர்கள் வாருங்கள்

என்னை நீங்கள் நண்பன் அழைத்தது உண்மையானால் வாருங்கள் என்று அழைத்தான் அப்போது ஒளி பிழம்பாக கண்ணன் மட்டும் தோன்றினான் ,,திருடனை பார்த்து என்ன நண்பா அழைத்தாயா என்றான் ,,,,,திருடன் சந்தோசமாக அய்யரிடம் கூறினான் ஸ்வாமி சிறுவன் -கண்ணன் –வந்துவிட்டான் பாருங்கள் என்றான்,,ஆனால் அவர்கள் இருவர் கண்ணுக்கும் கண்ணன் தெரியவில்லை ,,,,

ஸ்ரீனிவாசஅய்யரும்,,,, ஊர்தலைவரும் ,,,,ஏண்டா நீ உன் திருட்டை மறைக்கிறதுக்கு எங்களை பைத்தியம் ஆக்குகிறாயா இப்போதே உன்னை அழைத்து போய் சிறையில் அடைத்தால்தான் உனக்கு புத்திவரும் என்று அவனை இழுத்தனர் ,,,,,,

அப்போது நில்லுங்கள் என் நண்பனை அழைத்து சென்று சிறையில் அடைக்க நீங்கள் யார் ,,,என்று ஒரு குரல் அசிரியாக கேட்டது மூவருக்கும் ,,,,அய்யரும் ,,,ஊர்தலைவரும் அதிர்ச்சியாகி நிற்க ,,,,குரல் தொடர்ந்தது ,,,,,வேதங்களை,,படித்து ஆச்சாரமாக பூஜை செய்தால் போதுமா நம்பிக்கை என்கிற உயிரோட்டம் அதில் இருக்க வேண்டாமா?

கதை என்று நினைத்து வாழ்வோருக்கு எல்லாம் கண்ணன் வருவதில்லை –உண்மை என்று நம்பி அழைப்பவருக்கே கண்ணன் வருவான் –அய்யரும் ,,,,ஊர்தலைவரும் தரையில் மண்டியிட்டு கண்ணா எங்கள் தவறை மன்னித்து விடு ,,,,உன்னை நம்பிக்கையோட காண எங்களுக்கும் அருள் புரிவாய் அய்யா என்று அழுதனர் ,,,,

கண்ணன்அசீரியாக —–நம்பிக்கையோடு என் நகைகளை கவர்ந்து செல்ல வந்த என் நண்பனின் கையை பற்றுங்கள் இருவரும் நான் உங்கள் கண்களுக்கு தெரிவேன் என்றான் ,,,,

இருவரும் அப்படியே செய்ய ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் கண்களுக்கு தெரிந்து நகைகள் அனைத்தும் தன் நண்பனுக்கே சொந்தம் என்று கூறி மறைந்தான் ,,,,- நம்பிக்கையோடு நாமும் ஸ்ரீகிருஷ்ணன் கதைகளை தினந்தோறும் கேட்டு, படித்து, தியானித்து காத்திருப்போம், ஸ்ரீகிருஷ்ணன் நம்மையும் தேடி நிச்சயம் வருவான், அருள் புரிவான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version