Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்ரத சப்தமி சிறப்பு: துவாதச ஆர்யா சூரிய ஸ்துதி!

ரத சப்தமி சிறப்பு: துவாதச ஆர்யா சூரிய ஸ்துதி!

suryabhagavan
suryabhagavan

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

துவாதச ஆர்யா சூரிய ஸ்துதி:-

ஆர்யா சந்தஸ்ஸில் இயற்றப்பட்ட இந்த ஸ்லோகங்கள் ஸ்ரீகிருஷ்ணனின் புதல்வன் சாம்பனின் எதிரில் சூரியபகவானின் அருளால் ஆகாயத்திலிருந்து விழுந்தன.

1.உத்யன்னத்ய விவஸ்வான் ஆரோஹன்னுத்தராம் திவம் திவ:|
ஹ்ருத்ரோகம் மம சூர்யோ ஹரிமாணம் சாசு நாசயது ||

பொருள்:- உதயித்தபடி உயர்ந்த ஆகாயத்தில் ஏறும் ஒளி வடிவான ‘விவஸ்வான்’ (தன் ஒளியால் பரவுபவன்) சூரியன், என் இதய நோயையும் காமாலை வியாதியையும் விரைவில் குணப்படுத்துவானாக!

(‘ஹ்ருத்ரோகம்’ என்ற சொல் இதய நோயைக் குறிப்பதோடு கண்ணுக்குத் தெரியாத மானசீக நோய்களையும் குறிக்கிறது. ‘ஹரிமாணம்’ என்ற சொல் மஞ்சள் காமாலையை மட்டுமின்றி வெளியே தெரியும் உடல் நோய்களையும் குறிக்கிறது. சூரிய பகவான் அந்தரங்கமான மற்றும் வெளிப்படையான நோய்களை நீக்குபவர் என்பது இதன் கருத்து)

2. நிமிஷார் தேநைகேன த்வேச ஸதே த்வே ஸஹஸ்ரே த்வே|க்ரமமாண யோஜநாநாம் நமோஸ்துதே நஸினநாதாய ||

பொருள்:- கண்ணிமைக்கும் நேரத்தில் பாதியிலேயே இரண்டாயிரம் யோஜனை தூரத்தை கடக்கும் சூரியதேவா! தாமரைகளுக்கு தலைவனான உனக்கு நமஸ்காரம்!

3. கர்ம ஞான க தசகம் மனஸ்ச ஜீவ இதி விஸ்வஸர்காய|
த்வாதசதா யோ விசரதி ஸ த்வாதச மூர்திரஸ்து மோதாய||

பொருள்:- கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம், ஜீவன் எனப்படும் சைதன்யங்கள் எல்லாம் ஆதித்யனே! விஸ்வ படைப்பின் நிர்வாகத்திற்காக இந்த பன்னிரண்டு வடிவங்களில் சஞ்சரிக்கும் துவாதச ஆதித்ய சொரூபன் எமக்கு மகிழ்ச்சி அளிப்பவனாகட்டும்!

4. த்வம் ஹி யஜு ருக் சாம: த்வமாகமஸ்த்வம் வஷட்கர:|
த்வம் விஸ்வம் த்வம் ஹம்ஸ: த்வம் பானோ பரமஹம்ஸஸ்ச||

பொருள்:- ஓ பானூ! ருக் வேதம், சாம வேதம், யஜுர் வேதம், மந்திர சாஸ்திரங்கள், வஷட்காரம் (யக்ஞ வடிவம்), ஸர்வ விஸ்வம், ஹம்சம் (ப்ராண வடிவம்), பரமஹம்சம் (பரப்பிரம்ம வடிவம்) அனைத்தும் நீயே!

5. சிவ ரூபாத் ஞானமஹம் த்வத்தோ முக்திம் ஜனார்தனாகாராத்|
சிகி ரூபாதைஸ்வர்யம் த்வத்தஸ்சா ரோக்ய மிச்சாமி||

பொருள்:- சிவ ரூபத்தோடு உள்ள உன்னிடமிருந்து ஞானத்தையும், விஷ்ணு வடிவிலுள்ள  உன்னிடம் முக்தியையும், அக்னி சொரூபமான உன்னிடம் ஐஸ்வரியத்தையும், சூரிய ரூபனான  உன்னிடமிருந்து ஆரோக்கியத்தையும் வேண்டுகிறேன்! (சர்வதேவதைகளும் ஒன்றான ஆதித்யன் சகல கோரிக்கைகளையும் தீர்த்தருளுவான் என்பது கருத்து)

6. த்வசி தோஷா த்ருஸி தோஷா: ஹ்ருதி தோஷா யே கிலேந்த்ரிய ஜ தோஷா:|
தான் பூஷா ஹத தோஷ: கிஞ்சித் ரோஷாக்னி நா தஹது||

பொருள்:- பூஷா (போஷிப்பவன்) ஆகிய சூரியன் தன் பிரதாபத்தைச் சிறிது காட்டி எங்கள் தோல் வியாதிகளையும், கண் நோய்களையும், இதய நோய்களையும், சகல இந்திரியங்களில் இருக்கும் குறைகளையும் நீக்கி விடட்டும்!

7. தர்மார்த காம மோக்ஷ ப்ரதிரோதானுக்ர தாப வேக கரான்|
பந்தீக்ருதேந்த்ரிய கணான் கதான் விகண்டயது சண்டாம்சு:||

பொருள்:- தர்மம் அர்த்தம் காமம் மோட்சம் இவற்றை சாதனை செய்பவர்களுக்குத் தடையாக இருப்பது, தீவிரமான தாபத்தை ஏற்படுத்துவது, இந்திரிய சக்திகளைக் குறைப்பது போன்ற வியாதிகளை நிர்மூலமாக்கி, தீவிர காந்தி கிரணங்களைக் கொண்டு சூரியன் (சண்டாசு)  எமக்கு ஆரோக்கியத்தை அருளட்டும்!

8. யேன வினேதம் திமிரம் ஜகதேத்ய க்ரஸதி சரமசரம கிலம்|
த்ருத போதம் தம் நளினீ பர்தாரம் ஹர்தார மாபதாமிதே!||

பொருள்:- கமலங்களின் பதியான எந்த சூரியன் இல்லாவிட்டால் அடர்ந்த இருள் பரவி இந்த ஸ்தாவர ஜங்கமங்கள் வடிவான ஜகத்தினை விழுங்கிவிடுமோ அந்த ரவி, கமலங்களை மலரச் செய்வது போலவே எமக்கு புது ஒளியோடு ஞான பிரகாசத்தையும் ஸ்பூர்த்தியையும் அளிப்பானாக என்று ஆபத்துகளை நீக்கும் சூரிய பகவானை பிரார்த்திக்கிறேன்!

9. யஸ்ய ஸஹஸ்ரா பீஸோ ரபீசுலேஸோ ஹிமாம்சு பிம்பகத:||பாஸயதி நக்த மகிலம் பேதயது விபத்கணானருண:||

பொருள்:- சகஸ்ர கிரணங்களுள்ள எந்த சூரியகாந்தியின் துளி சந்திரனிடம் சேர்ந்து இரவை ஒளிமயமாக்குகிறதோ அந்த அருணன் எங்கள் ஆபத்துகளனைத்தையும் நீக்குவானாக!

10. திமிரமிவ நேத்ர திமிரம் படலமிவா சேஷரோக படலம் ந:|
காசமிவாதி நிகாயம் காலபிதா ரோகயுக்ததாம் ஹரதாத்||

பொருள்:- காலத்திற்கு காரணமானவனாகிய பாஸ்கரன் இருளை விலக்குவது போலவே என் கண் பொறையையும், தன் வெப்பத்தால் நாணல் புற்களை எரித்துவிடுவது போல் எங்கள் மனவேதனைகளின் கூட்டத்தையும், மொத்தமாக எங்கள் எல்லா வியாதி நிலைகளையும் போக்கிவிடட்டும்!

11. வாதாஸ்ம ரீக தார்ஸஸ் த்வக்தோஷ மஹோதர ப்ரமேஹாம்ஸ்ச|
க்ரஹணீ பகந்தராக்யா மஹதீ ஸ்த்வம் மே ருஜோ ஹம்ஸி||

பொருள்:- ஆதித்ய தேவா! வாத நோயையும், அஸ்மரீ நோயையும் (சிறுநீர்ப்பையில் கல் சேரும் நோய்), மூல வியாதியையும், சரும நோய்களையும், மஹோதர நோயையும் (வீக்கம்), மேக நோயையும், கிராணி நோய் என்ற வயிற்றுப் போக்கையும், பவித்திர வியாதியையும்… இது போன்ற அனைத்து பெரிய வியாதிகளையும் நீக்குவாயாக!

12. த்வம் மாதா த்வம் சரணம் த்வம் தாதா த்வம் தனம் த்வமாசார்ய:|
த்வம் த்ராதா த்வம் ஹர்தா விபதாமர்க! ப்ரசீத மம பானோ||

பொருள்:- அர்க்கா! பூஜிக்கத் தகுந்தவனே! எமக்கு நீயே தாய்! நீயே அடைக்கலம் தருபவன்! நீயே போஷகன்! நீயே எங்கள் தனம்! நீயே ஆச்சாரியன்! ரட்சகன்! ஆபத்துகளை விலக்கு! பானூ! உனக்கு நமஸ்காரம்!

13. இத்யார்யா த்வாதசகம் சாம்பஸ்ய புரோ நப: ஸ்தலாத்பதிதம்|
படதாம் பாக்ய ஸம்ருத்தி: சமஸ்த ரோக க்ஷயஸ்ய ஸ்யாத்||

பொருள்:-  இந்த பன்னிரண்டு ஸ்லோகங்கள் ஆர்யா சந்தஸ்ஸில் இயற்றப்பட்டவை. ஸ்ரீகிருஷ்ணனின் புதல்வன் சாம்பனின் எதிரில் சூரியபகவானின் அருளால் ஆகாயத்திலிருந்து விழுந்த ஸ்லோகங்கள் இவை. இவற்றை படிப்பவர்களுக்கு சூரியனின் அருளால் சகல சௌபாக்கியங்களும் பெருகும்! நோய்கள் விலகும்!

(மூலம்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா இயற்றிய சூரியாராதனை நூல்)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,141FansLike
376FollowersFollow
66FollowersFollow
74FollowersFollow
2,834FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...

Exit mobile version