― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்நவ.18: இன்று நாக சதுர்த்தி!

நவ.18: இன்று நாக சதுர்த்தி!

naga-vazhipadu

தீபாவளி அமாவாசைக்குப் பிறகு நான்காம் நாள் சுக்லபட்ச சதுர்த்தி அன்று கார்த்திகை மாதத்தில் நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையை முக்கியமாக இரு தெலுங்கு மாநிலங்களிலும் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சில பகுதிகளிலும் கடைபிடிக்கிறார்கள். சிலர் சிராவண மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தி அன்று நாகசதுர்த்தி கொண்டாடுகிறார்கள்.

இன்று பெண்கள் சர்ப்பங்களின் தலைவனான நாகராஜாவுக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். திருமணமான பெண்கள் உபவாசம் இருந்து கணவர், குழந்தைகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். பக்தர்கள் பாம்பு புற்றுக்கு பால் வார்த்து வழிபடுகிறார்கள்.

அனந்தன், வாசுகி, சேஷன், பத்மன், கம்பாலன், காளியன், தக்ஷகன், கர்கோடகன், ஆஸ்வதாரன், திருதராஷ்டிரன், சங்கபாலன், பிங்கலன் என்ற 12 நாகங்களை இன்று வழிபடுகிறார்கள்.

naga-vazhipadu1

விஷ பயம் நீங்கவும் வயல்கள் பாதுகாக்கப்படவும் கிராமங்களில் நாக சதுர்த்தி பண்டிகை அதிக அளவில் கொண்டாடப்படுகிறது.

நாகசதுர்த்தி அன்று சர்ப்பங்களை பூஜிப்பதால் ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷம், காலசர்ப்ப தோஷம் போன்றவற்றை சுப்ரமணியசுவாமி நீக்குவார் என்பது புராண வசனம்.

இன்று ஞானசக்தியாத்மா, ஸ்கந்தன் போன்ற16 நாமங்களால் சுப்ரமணியசுவாமியை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version