புரோ கபடிப் போட்டியில் மும்பை மற்றும் பெங்கால் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 6-வது புரோ கபடி லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. பாட்னாவில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணியை 40-39 என்ற புள்ளிக் கணக்கில் மும்பை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-28 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.