உள்ளாட்சித் தேர்தல்… வேட்டு வைத்தது கூட்டணிகளுக்கு! அங்கே முட்டிக்கிச்சு! இங்கே புட்டுக்கிச்சு!

durai murgan - 2026

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என்று திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் திமுக பொருளாளர் துரைமுருகன்!

வேலூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திமுக., பொருளாளர் துரைமுருகன், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் விலகட்டும். எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.

மேலும், தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது; இன்னும் பிரியவில்லை; கூட்டணியில் யாருக்கும் திமுக பாரபட்சம் காட்டுவது இல்லை; கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வருகிறோம் என்று கூறினார் துரைமுருகன்.

இவ்வாறு கூறுவதற்குக் காரணம் காங்கிரஸின் அழகிரியும், ப.சிதம்பரமும் பேசிய பேச்சுக்களும் கருத்துகளும்தான்!

உள்ளாட்சியில் காங்கிரசுக்கு உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ப. சிதம்பரம் தெரிவித்திருந்தார். சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் ப.சிதம்பரம் எழுதிய “அச்சமில்லை அச்சமில்லை” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ப.சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்ற வருத்தத்தை தமிழக காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி தனது, ஆதங்கத்தை வெளிப்படுத்தியதே தவிர, இது மிரட்டல் அல்ல எனவும் 2021ஆம் ஆண்டு சட்டன்றத் தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்பதே தங்கள் விருப்பமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக இதுகுறித்து தனது ஆதங்கத்தை ஒரு அறிக்கையாக வெளிப்படுத்தியிருந்தார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

ஆனால் அது தேசியதலைமையிடத்திலும், திமுக., தலைமைக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. தில்லியில் காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காமல் திமுக., புறக்கணித்தது. அதற்கு அழகிரியின் அறிக்கைதான் காரணம் எனக் கூறப் பட்டது.

அதே நேரம், தில்லி சென்ற அழகிரியிடம் காங்கிரஸ் தலைமை கடிந்து கொண்டுள்ளது. இத்தகைய பின்னணியில் காங்கிரஸுக்கு திமுக.,வுக்கும் இடையிலான கூட்டணி ஊசலாடிக் கொண்டிருப்பதாகக் கூறப் படுகிறது.

அடுத்து வரும் ரஜினியை வைத்து அவர் உதவியில் தாங்களே ஆட்சியமைக்கலாம் என்று காங்கிரஸ் கருதுவதாக வந்த தகவல்களை அடுத்து திமுக., தலைமை கோபம் கொண்டதாகவும் கூறப் படுகிறது. இதன் பின்னணியில்தான் துரைமுருகன் இன்று அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னொரு கூட்டணியான பாஜக., அதிமுக., இடையே இதே போன்ற மனத்தாங்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

jayakumar - 2026

பாஜக.,வின் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக., வின் ஜெயக்குமார் ஆகியோருக்கு இடையே எழுந்துள்ள வார்த்தை மோதல்கள், கூட்டணிக்குள் இதே போன்ற பிரச்னையை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப் படுகிறது. ஆனால், இரண்டாம் மட்டத் தலைவர்களை பேசத் தூண்டிவிட்டு அதிமுக., தலைமை வேடிக்கை பார்ப்பதாக பாஜக.,வினர் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories