இங்கிலாந்தில் விளையாட்டு மைதானம் அருகே அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர் தீப்பிடித்து நொறுங்கியது. லைசஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் உரிமையாளரான விச்சை ஸ்ரீவத்தனப்பிரபா என்பவருக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் நேற்று இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து லைசஸ்டரில் உள்ள கிங் பவர் மைதானம் அருகே அதனை தரையிறக்க முயன்றபோது, அருகிலிருந்த கார் நிறுத்துமிடத்தில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் சில கார்களும் தீக்கிரையாயின. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.




