கலிபோர்னியாவில் சான் ஜோஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இங்கிலாந்தின் ஹீதர் வாட்சனை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-4 என வீனஸ் வில்லியம்ஸ் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 4-6 என இழந்தார். வெற்றிக்கான 3-வது செட்டில் சிறப்பாக விளையாடி 6-0 எனக் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்த தொடரில் இருந்து முகுருசா மற்றும் மேடிசன் கீஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.



