Home அடடே... அப்படியா? எண்ணெய் குளியல்: எப்படி எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம்..!

எண்ணெய் குளியல்: எப்படி எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம்..!

தீபாவளி எண்ணெய்க் குளியல்களில் கவனிக்க வேண்டியவை..!

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, உடலிலுள்ள வர்மப்புள்ளிகளை நாமாகவே தூண்டிவிடுகிறோம். எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

சுற்றத் தூய்மை, உள்ளத் தூய்மை, உடல் தூய்மை மூன்றுக்குமானவையே பண்டிகைகள். வசிப்பிடத்தைத் தூய்மையாக்கிப் புதிது செய்வது, புத்தாடைகள் வாங்கி அணிவது, விட்டுப்போன உறவுகளோடு மீண்டும் கைகோத்து அளவலாவுவது எனப் பண்டிகை புதுப்பித்தல்கள் பலவிதம். புதுமைக்கும் புதுமை தருவது, இந்தத் தீபாவளிப் பண்டிகை.

‘உடல் தூய்மை’ என முன்னோர் வகுத்துக்கொடுத்ததே, எண்ணெய்க்குளியல். தீபாவளிக்கான ஆயத்தங்கள் எப்படித் தொடங்கினாலும் தீபாவளி தினம், எண்ணெய்க்குளியலில் இருந்துதான் தொடங்குகிறது.

எண்ணெய்க்குளியலால் என்னென்ன பயன்கள்… குளியலில் என்னவெல்லாம் கூடாது… எந்தெந்த வயதுக்கானது எண்ணெய் நீராடல்..

எண்ணெய்க்குளியல் என்பது, ‘தீபாவளிக் குளியல்’ என்றே பெயராகிவிட்டது. ஆனால், அடிக்கடி எண்ணெய் தேய்த்து நீராடுவது நல்லது. நமது மண், வெப்பமண்டலம் சார்ந்தது. எனவே, உடலில் அதீத வெப்பம் சேர்வதைத் தணிப்பதற்கு எண்ணெய்க்குளியல் அவசியப்படுகிறது” .

மேலும், “நம் பழைய மருத்துவக் குறிப்புகளின்படி வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆண்களும், செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் பெண்களும் இரண்டுமுறை எண்ணெய்க்குளியல் மேற்கொள்ள வேண்டும். இதனால், உடலில் நிணநீரோட்டம் சீரடைகிறது. இந்த நிணநீரோட்டம்தான் உடலின் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கியப் பங்காற்றுகிறது”

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, உடலிலுள்ள வர்மப்புள்ளிகளை நாமாகவே தூண்டிவிடுகிறோம். எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. மேலும், பாசிட்டிவ் எனர்ஜிக்கான, மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை இந்த எண்ணெய் மசாஜும், அதற்கடுத்த குளியலும் தூண்டிவிடுகின்றன.

oil bath

தேரையர், ‘எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்’ என்கிறார். வெந்நீரில்தான் எண்ணெய்க்குளியலை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது சித்த மருத்துவம்.

நல்லெண்ணெய்யைச் சூடாக்கி, அதில் கொஞ்சம் சீரகத்தைச் சேர்த்து, சீரகம் லேசாகப் பொரிந்து ஒடியக்கூடிய பக்குவம் வந்ததும் அதை அடுப்பிலிருந்து இறக்கி, உடலில் தேய்க்க வேண்டும். பிறகு, வெந்நீரை வெதுவெதுப்பான பதத்தில் எடுத்துக்கொண்டு குளியல் மேற்கொள்ள வேண்டும். அசதி போகுமே எனச் சூடாகக் குளிப்பவர்கள் இருக்கிறார்கள். அது, தவறு. வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். முந்தைய நாள் இரவில் எண்ணெய் தேய்த்து, மறுநாள் அதிகாலை குளிக்கலாமெனக் காத்திருப்பார்கள். அதுவும் தவறு. எண்ணெய் தேய்த்த அரைமணி நேரத்துக்குள் குளித்துவிட வேண்டும். இல்லையெனில், குளிர்ச்சியால் சளி உள்ளிட்ட தொந்தரவுகளை எதிர் கொள்ளவேண்டியிருக்கும்” என்கிறார்.

சீயக்காய் அல்லது நலுங்குமாவை பயன்படுத்தலாம். எளிமையான உணவுகள் உண்ண வேண்டும். எண்ணைக் குளியல் செய்த அன்று பாலுறவு கூடாது. பகலுறக்கம் கூடாது. கடுமையான வெய்யிலில் வேலை செய்யகூடாது. குளிர்ந்த உணவுகள் கண்டிப்பாக கூடாது.

பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க சரியான நாள்

ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.

திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும்.

செவ்வாய் குளித்தால் துன்பம் வரும்

புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்.

வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும்.

வெள்ளி குளித்தால் செல்வம் மிகும்.சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்.

ஆண்களும் எண்ணெய் குளிப்பும்

திங்கட் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்.

செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு கண்ட மாலை நோய் வரும்.

வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.

வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும்.இனி எண்ணெய் தேய்த்து குளிக்க முயலும் – அல்லது நினைக்கும் அன்பர்கள்

சனி, புதன் நாட்களில் குளிக்கவும்.

முதன்முறையாக இப்போதுதான் எண்ணெய் தேய்த்துக் குளிக்கப்போகிறேன் என்பவர்களின் கவனத்திற்குச் சில ஆலோசனைகள்.

எண்ணெய் குளிர்ச்சி என்பதால், சட்டென சளிபிடித்துவிடும் வாய்ப்பு அதிகமுள்ளது. ஆனாலும், பயப்படத் தேவையில்லை. சிறிதளவு மிளகுத்தூளை எடுத்து உச்சந்தலையில் தேய்த்துக்கொண்டு, பிறகு எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். சளி பிடிப்பதை மிளகுப்பொடி கொஞ்சம் கட்டுப்படுத்தும். புதிதாக எண்ணெய்க் குளியல் மேற்கொள்ளத் தொடங்குவதை மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் தவிர்க்கலாம்.

எண்ணெய்க்குளியல் மேற்கொள்கிற நாள்களில், கண்டிப்பாக அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நீராடியதால் ஏற்பட்ட உடல்குளிர்ச்சி, செரிமானத்தைத் தாமதப்படுத்தி ஆரோக்கியக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

தலைக்குத் தேய்த்த எண்ணெய்யை உடலுக்குத் தேய்க்கக்கூடாது. ‘தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்’ என்கிறது, ஆசாரக்கோவை.

எண்ணெய் மட்டுமல்ல, தைலங்களும் உடலுக்கு நலம் தருபவையே. செம்பருத்தி, நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி எல்லாமே பித்தத்தைப் போக்கும். வாதம் நீக்கும் சுக்குத் தைலம், ரத்த அழுத்தம் சீராக்கும் அரக்குத் தைலம், கபத்தைப் போக்கும் நொச்சித் தைலம் என ஏராளமான தைலங்களை சித்த மருத்துவர்கள் தங்கள் மருத்துவத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.

இவற்றுக்கு மருத்துவ குணம் உண்டெனினும், இம்மாதிரித் தைலங்களை மருத்துவர் பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும்”

நல்லெண்ணெய்க் குளியல் மட்டுமல்லாது, தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றையும் தலைக்கும் உடலுக்கும் தேய்த்து நீராடலாம். அப்படி நீராடிய தினங்களில் மதியம் தூக்கம் வரும். சில நிமிடங்கள் தூங்கிவிட்டு எழுந்திருக்கலாம். அதிக நேரம் உறங்கிவிடக்கூடாது, செரிமானப் பிரச்னையை ஏற்படுத்தும்.

நவீன காலத்துக்கு மாறிவிட்ட நாம், எண்ணெயே அழகுக்கும், ஆரோக்கியத்துக்குமானது என்பதை அவ்வப்போது மறந்து, அழகு சாதனப் பொருள்களுள் வீழ்ந்துகிடக்கிறோம். அடிக்கடி கை கால் மூட்டுகளுக்கு எண்ணெய் தேய்த்துப் பழகிக்கொள்ள வேண்டும்.

இதனால், மூட்டுகளில் ஏற்படும் உராய்வுகளைத் தவிர்க்கலாம். தலையில் தொடங்கி உள்ளங்கைகள், மார்பு, தொப்புள், உள்ளங்கால் என ஒவ்வொரு பாகமாக நன்றாக நீவிவிட்டு எண்ணெய் தேய்க்க வேண்டும்.

“ஷாம்புகளைவிட சிகைக்காயும், அரப்பும்தான் எண்ணெய்க்குளியலுக்கு ஏற்றவை. குளியல் பொடியும் பயன்படுத்தலாம். இவற்றோடு பெண்கள் நலங்கு மாவு, பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். அதிகாலை குளிர்ந்த வேளையில் எண்ணெய் நீராடல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

இப்போதிருக்கிற மழைக்காலத்தைப் பொறுத்தவரை, காலை சூரிய வெளிச்சம் வந்ததும் நீராடுவதுதான் உடலுக்கு நல்லது. வாதமும் பித்தமும் தணியக் குளிக்கலாம். எண்ணெய்க்குளியலை மாதவிடாய் காலப் பெண்கள், வலிப்பு நோயுடையவர்கள் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளை மூன்று வயதிலிருந்து எண்ணெய்க் குளியலில் ஈடுபடுத்தலாம். வயது மூப்புடையவர்கள் தவிர்க்க வேண்டும்”

வாதநோயாளிகளுக்கும் சோரியாசிஸ் இருப்பவர்களுக்கும் மருத்துவர்கள் முதலில் எண்ணெய்க்குளியலைத்தான் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக, தலைக்குக் கொஞ்சம் நெய்யைத் தேய்த்து நீராடச்செய்கின்றனர்.
காக்கா குளியலெனப் பெயர்சூட்டி, உடலில் மட்டும் நீரூற்றிக் குளிப்பது அவ்வளவு சரியல்ல. “குளியலென்பதே, தலையிலிருந்துதான் தொடங்குகிறது”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version