― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதுணுக்குகள்வரலாற்றில் இன்று... பிப்.28: தேசிய அறிவியலின் மகுடம் சர் சி.வி.ராமன்!

வரலாற்றில் இன்று… பிப்.28: தேசிய அறிவியலின் மகுடம் சர் சி.வி.ராமன்!

- Advertisement -

“ராமன்_விளைவு” கண்டுபிடிக்கப்பட்ட பிப்ரவரி 28-ம் தேதி `தேசிய_அறிவியல்_தின’மாகக் கொண்டாடப்படுகிறது. இராமன் விளைவை கண்டுபிடித்தற்காக நோபல் பரிசு பெற்றவர் சர். சி. வி. ராமன்.

சர் சந்திரசேகர வேங்கட ராமன், நவம்பர் 7, 1888ல் திருச்சியில் பிறந்து – விளையாட்டு வயதில் அலமாரியில் இருந்த தந்தையின் புத்தகங்களால் ஈர்க்கபட்டு – அறிவியல் படைப்புகளில் மயங்கி – அறிவியல் மாணவனாய் வாழ்வை தொடங்கினார்.

1907 ல் இந்திய நிதித் துறை தேர்வில் இந்தியாவிலேயே 1st மார்க் எடுத்து தலைமை கணக்களாரக பணியை தொடர்ந்தார் – அலுவலக நேரம் போக ஓய்வு நேரத்தில் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் ஒலியியல் & ஒளியியல் ஆராய்ச்சியை மேற்கொண்டார்…. தனது வருமானத்தின் பெரும் பகுதியை செலவிட்டு! பிந்நாளில் பணியை துறந்து அறிவியல் ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட்டார் – உயர் பதவியை விட ஆராய்ச்சி பணியே முக்கியமென!

நவீன ஆய்வுக் கருவிகளைவிட, தற்சிந்தனையும், கடின உழைப்புமே அறிவியல் ஆய்வுக்கு தேவையென தனது ஆராய்சசிக்கு தேவையான பல கருவிகளை தானே செய்தார் – சிலதை மட்டுமே வாங்கினார்!

பிடில், மிருதங்கம், தபலா போன்ற பல்வேறு இசைக் கருவிகள் உண்டாக்கும் ஒலிகளைக் “Sound Vibration” என்ற தலைப்பில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பல்வேறு ஆய்வுகளுக்காக – பன்னாநாட்டு அறிஞர்கள் தொடர்புகளுக்காக 1921ல் Mediterranean கடற்பயணத்தில்….. வானும் – கடலும் ஏன் நீல நிறத்தில் உள்ளது? என்று அவருக்குள் உண்டான கேள்வியே அவரின் “இராமன் விளைவு” கண்டுபிடிப்புக்கு வித்தானது. கேள்விக்கு பதில் தேடி பல ஆய்வுகளை கண்டறிந்து வெளியிட்டார்.

1926ல் அறிவியலுக்காகவே Indian Journal Of Physics இதழையும் தொடங்கி நடத்தி வந்தார்.

1927ல் X – Ray வின் Compton Effectஐ வைத்து ஒளி ஆராய்ச்சியை தொடங்கினார். ஒளியானது ஒரு பொருளின் ஊடாக செல்லும் பொழுது சிதறும் ஒளி அலைகளில் (Wave Length) ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்தார்.

அதாவது ஒரு-நிற ஒளியை (monochromatic light) ஒளிபுகக்கூடிய பொருள்கள் வழியே செலுத்தி அதன் மூலம் பெறப்படும் நிற நிரலை (spectrum) ஒரு நிற நிரல் காட்டியில் (spectrograph) பதிவு செய்ததில் புதிய கோடுகளை கண்டறிந்தார்.

ராமன் கண்டுபிடித்ததால் ராமன் கோடு(Raman Lines) என்று பெயரிடபட்டு! பெருமைபடுத்தபட்டு! 1930ல் ‘நோபல் பரிசு’ வழங்கபட்டது – பிந்நாளில் இதற்கு “இராமன் விளைவு” (Raman Effect) என்று பெயரிடப்பட்டது.

வேதியியல் கூட்டுப்பொருள்களின் (Chemical Compounds) மூலக்கூறு அமைப்பைப்பற்றி அறிந்து கொள்ள மிக முக்கியமாக “இராமன் விளைவு” பயன்படுகிறது.

இன்றும் நோய்கள் சிலவற்றைக் குணப்படுத்தும் லேசர் கதிர் தொடங்கி பெட்ரோல் மூலக்கூறென போரில் பயன்படும் பாதுகாப்புக் கருவிகள் என நாம் எங்கெங்கும் காணும் பொருளின் பயன்பாட்டில் இராமன் விளைவுக்கு முக்கிய பங்குண்டு!!!

பின்பு 1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில் இயக்குனராகி – கடின உழைப்பால் பல ஆய்வு கோட்பாடுகளையும் உருவாக்கினார்.

1947ல் சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து, பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி தனது மரணம் வரை பணிபுரிந்தார். ஒருமுறையாவது இங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று காட்டுங்கள்.

`ஐந்து வயதிலிருந்தே குழந்தைகளை விஞ்ஞானியாக வளர்க்க வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து சலிப்படையாமல் – பதில் சொல்லி – அவர்களின் கற்றல் அறிவு, புத்தகங்களோடு தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் நாடு அறிவியலில் ஒளிரும்’ என்று விதையை விதைத்து கொண்டிருந்தார் மக்களிடையே – தம் வாழ்நாள் முழுவதும்!!!

என்றுமே பதவிகளையோ பதக்கங்களையோ தேடி செல்லாத மனிதன்…… ராயல் சொசைட்டி Fellowshipல் தொடங்கி நைட் ஹூட், மேட் யூச்சி ஆகிய பிற வெளிநாட்டு அங்கீகாரங்கமென… சர் பட்டம், பாரத் ரத்னா, லெனின் அமைதிப்பரிசு, நோபல் பரிசென ன என உலகின் புகழின் உச்சம் அவரை தேடி வந்தது!!! உச்சத்திலும் கடைசிவரை அறிவியல் மாணவனாய் மட்டுமே வாழ்ந்தார்.

அறிவியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு தனது தனிமனித வாழ்க்கையில் எளிமையாக ஒழுக்காமான வாழ்க்கையை வாழ்ந்து 1970 நவம்பர்21ல் இயற்கை எய்தினார்.

பட்டம் வாங்கினாலே டாக்டரோ – இன்ஜீனியரோ – அறிவியாளரோ ஆகிட முடியாது….. ஒவ்வொரு அசைவையும் அறிவியல் கண் கொண்டு புரிந்து கொள்ளாத வரை என்ற அறிவியல் தத்துவத்தை இம்மண்ணுக்கு விட்டு சென்ற மாமனிதர்!!!

  • ஹரி லக்ஷ்மணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version