― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்மலரும் நினைவுகள்: இயக்குனர் அமரர் மணிவண்ணனின் மறுபக்கம்!

மலரும் நினைவுகள்: இயக்குனர் அமரர் மணிவண்ணனின் மறுபக்கம்!

Manivannan
அ.தி.மு.க தலைமை கழக பேச்சாளர் நண்பர் வடபழனி ராமகிருஷ்ணன் பிறந்த-இறந்தவர்களைப் பற்றி வழக்கம் போல தகவல் அனுப்பி இருந்தார். அதில் சினிமா நடிகர்/இயக்குனர் மணிவண்ணன் நினைவு நாள் என புகைப்படத்துடன் கூடிய சிறு குறிப்பும் அனுப்பினார். அதனைப் பார்த்த உடன் மணிவண்ணன் உடன் ஏற்பட்ட சுவையான சந்திப்பைப் பற்றிய நினைவலையும் வந்தது.

2002ம் ஆண்டு என நினைக்கிறேன். சகோதரர் மோகன்ராஜூலு மாநில இளைஞர் அணி தலைவர். நான் மாநில செயலாளர். அண்ணன் கோவிந்தகுமார் அகில இ.செ.கு.உறுப்பினர். தமிழக பொருப்பாளர். பழனியில் மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம். நாங்கள் அனைவரும் திருப்பூர் சென்று மாநில பொருளாளர் சந்திரசேகர் வீட்டிற்குப் போய் அங்கிருந்து அவருடன் காரில் பழனி போக முடிவு.

நான் திருப்பூர் செல்ல sleeper class ticket எடுத்துவிட்டேன். ஏதோ காரணத்தால் மோகன்ராஜூலு ticket confirm ஆகவில்லை. எனவே அவர் என் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு 1st AC coachல் வரும் அப்போதைய கோவை MP அண்ணன் CPR மற்றும் ஊட்டி MP மாஸ்டர் மாதன் ஆகிய யாரோ ஒருவருடன் companion ஆகப் பிரயாணிக்கும் படி சொல்லிவிட்டு என் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு coachல் ஏறிவிட்டார். வண்டி புறப்பட்டதால் நானும் ஏறிக் கொண்டு கிட்டத்தட்ட அரக்கோணம் போய்தான் அண்ணன் CPR coachக்குப் போக முடிந்தது.

அந்த கூபேயில் அண்ணன் H.ராஜாவும் இவர்களுடன் இருந்தார். உடனே CPR பக்கத்து கூபேதான் என்னுடையது. அதில் உன் பெட்டியை வைத்துவிட்டு வாடா பேசிக் கொண்டு இருப்போம் என்றார். அந்த கூபே கதவு அடைக்கப்பட்டு இருந்தது. நான் கதவைத் தட்டிய உடன் அரை டிராயர்(பெர்முடாஸ்) T.Shirt, அதிக தாடிக்குள் ஒளிந்திருக்கும் ஒரு முகம் கையில் Glass உடன் கதவை திறந்து, நீண்ட நாள் பழகியது போல் casualஆக வாங்க, வாங்க நீங்கள் தான் என் co passengerஆ என்று பேச ஆரம்பித்தார்.

நானும் என்னை அறிமுகம் செய்து கொண்ட பின் அவர் ஒரு Glassயை எடுத்து நிரப்பி எனக்கும் கொடுத்தார். நான் வேண்டாம்ணே என்ற உடன் ஓ, நீங்கள் RSSகாரர் ஆயிற்றே அதனால் சாப்பிட மாட்டீர்கள் என சொல்லிக் கொண்டே இருக்கும் போது நான் அண்ணே பக்கத்து கூபேயில் கோவை MP உள்ளார், நான் அவரிடம் பேசிவிட்டு வருகிறேன். நீங்களும் உங்கள் “வேலையை” முடியுங்கள் என சொன்ன அடுத்த நொடி, ஏன் தம்பி நம்ப கவுண்டரா இருக்காங்க. எங்க MPகிட்ட நானும் பேச வேண்டும் என சொல்லி mouth freshener, body spray எல்லாம் போட்டுக் கொண்டு வந்தார்.

நான் கதவைத் திறந்து உள்ளே போன உடன் ஏண்டா லேட்டு என கேட்ட ராஜா அண்ணன் என் பின்னால் நின்ற தாடிக்காரரைப் பார்த்து மிகுந்த உற்சாகமாகி அனைவரும் வரவேற்று பல விஷயங்களை பேசிக் கொண்டு இருந்தோம்.

அந்தச் சமயத்தில் சென்னையில் ஒரு நபர் அமாவாசை என புனைப் பெயர் இட்டு அழைக்கப்பட்டதை ராஜா அண்ணன் நன்கு அறிவார். நான் அண்ணே இவர் தான் அமைதிப்படை அமாவாசை character owner என சொல்லவும் செம கற்பனை உங்களுக்கு என CPRம், ராஜா அண்ணனும் சிலாகித்தனர்.

அதற்கு மணிவண்ணன் அது கற்பனை இல்லை. என் வாழ்வில் நான் பார்த்த ஒரு real character என்றார். நாங்கள் அதிர்ச்சியில் அமைதியானோம். அவரே தொடர்ந்து MGR கட்சி ஆரம்பித்த போது மருதாசலம் என்பவர் கோவை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தார்.

அப்போது ஒரு நபர் care of platform.இரவில் cross cut road பிளாட்பார கடைக்காரர்களுடன் அங்கேயே உறங்குவார். அந்த platform நபருக்கு மருதாசலம் அறிமுகம் கிடைத்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தான் வளர ஆரம்பித்து மருதாச்சலத்தை ஓரங்கட்டும் வேலையை கச்சிதமாகச் செய்து பின்னாட்களில் MLA, கலைப் பணி என உச்சம் தொட்டார் என்றார்.

1000பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம் கூட வைத்திருக்கும் நபரை சொல்வது முறையா என்றேன். யோவ், அந்த பவுஷெல்லாம் 1985க்குப் பிறகானது. 80க்கு முன் மருதாசலம் தயவில் இருந்தவன் அவரை அரசியலில் அழித்தான் என்றார்.

பின்னர் கலைஞர், ஜெ, வைகோ என அரசியல் பேச்சு நீண்டது. நான் இடைமறித்து திரைப்படத்தில் நாத்தீகம் பேசும் நீங்கள் நிஜத்தில் அப்படியா என்றேன். மழுப்பினார். நான் விடாமல் உங்கள் தி.நகர் சரவண முதலித் தெரு ஆபிசில் உங்கள் ரூமில் உங்கள் டேபிள் கிளாசுக்குக் கீழே துர்கா, லஷ்மி, சரஸ்வதி படமும், உங்கள் படமான இனி ஒரு சுதந்திரம் படத்தைப் பாராட்டி இயக்குனர் K.பாலசந்தர் எழுதியக் கடிதம் இருந்ததையும் நினைவூட்டினேன். (1995வரை நான் electronic type writer service engineer.) மணிவண்ணனின் கமல ஜோதி கம்பைன்ஸ் என் client. Machine அவர் tableல் தான் இருக்கும்.

விவர்மாக நான் கேட்ட உடன், அட விடுங்க தம்பி, இந்த திராவிட பத்திரிகைகள், எழுத்தாளர்கள் இவனுங்க பாராட்டும், reviewக்கும் நாங்கள் போடும் வேஷமிது. சாமி இல்லை, மதச்சார்பின்மை என பேசும் அனைத்து சினிமாக்காரங்களும் வேஷம் போடுகிறோம், நான் உட்பட என்றார்.

மிக எதார்த்தமான மனிதன் மணிவண்ணனின் நினைவு நாள் என்பதைப் பார்த்த உடன் வந்த மலரும் நினைவுகள் இது.

– ஓமாம்புலியூர் ஜெயராமன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version