― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவிருது பெற்ற அபி சரவணன் ! சிறந்த சமூக சேவை !

விருது பெற்ற அபி சரவணன் ! சிறந்த சமூக சேவை !

- Advertisement -
file pic

அபி சரவணன் பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சமூக ஆர்வலராகவும் செயல்படுகிறார். இயற்கை சீற்றம், தேசிய பேரிடர் சமயங்களில் மொழி மாநிலம் பாராமல் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

file pic

அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஒருவாரமாக அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டார் அபி சரவணன்.

மழையால் அதிக அளவு பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில், தனது நண்பர்களுடனும் மற்றும் அசாம் மாநில அதிகாரிகள் சிலர் பாதுகாப்பு உதவியுடனும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று அரிசி மற்றும் உணவுப் பொருட்கள், துணிகள், மருந்து பொருட்கள், மற்றும் குடிநீர் ஆகியவற்றை தனது சொந்த செலவில் அபி சரவணன் வழங்கினார்.

file pic

இந்நிகழ்விற்காக தற்போது மலேசியாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அபி சரவணனுக்கு சிறந்த சமூக சேவை நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 130 விருதுகளில் இந்தியாவில் இருந்து 6 விருதுகள் தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒருவராக அபி சரவணனுக்கு கிடைத்திருக்கிறது.

அபி சரவணின் சேவையைப் பாராட்டி அஸ்ஸாம் மக்கள் கம்சா எனும் மரியாதையும் கலெக்டர் அலுவகத்தில் அரைனா எனும் அரசாங்க மரியாதையையும் வழங்கி கௌரவித்தது.குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version