― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்யூரோ 2020: கோப்பை வென்றது இத்தாலி!

யூரோ 2020: கோப்பை வென்றது இத்தாலி!

- Advertisement -

யூரோ 2020 இத்தாலி கோப்பை வென்றது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இங்கிலாந்து அணி போட்ட ஒரு ஆரம்ப கோலும் இறுதியில் நடந்த விறுவிறுப்பான சம்பவங்களும் இத்தாலிக்கு ஒரு சாம்பியன்ஷிப்பைப் பெற்றுத் தந்தன, மேலும் இங்கிலாந்தை எங்கே தவறு நடந்தது என்று ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப்பை இத்தாலி பெனால்டி ஷூட்அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது, 1966 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் தனது முதல் பெரிய பட்டத்தை வெல்லும் இங்கிலாந்தின் கனவு பொய்யானாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தகுதி பெறத் தவறியபோது அவமானப்படுத்தப்பட்ட இத்தாலிய அணியின் நற்பெயரை மீட்டெடுக்கப்பட்டது.

பெனால்டி ஷூட் அவுட் லண்டனின் வெம்ப்லி ஸ்டேடியத்தில் ஒரு மாத கால போட்டிகளுக்கு ஒரு நல்ல முடிவைத் தந்தது. ஒரு வருட தொற்றுநோய் தாமதம் மற்றும் எண்ணற்ற பொது சுகாதாரக் கவலைகளுக்கு இடையில் லண்டனில் ஒரு விறுவிறுப்பான இறுதிப் போட்டி நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்கான காத்திருப்பு விளையாட்டு ரசிகர்களுக்கு இந்த ஆட்டத்தின் மூலம் மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்திருக்கும். ஆட்டம் தொடங்கிய இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு டிஃபென்டர் லூக் ஷாவின் ஒரு கோலில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது, பின்னர் லியோனார்டோ போனூசி இரண்டாவது பாதியில் பதில் கோலடித்தார்.

இந்தக் கோல்களுக்கு முன்னும் பின்னும் ஆட்டம் இரு அணிகளுக்கும் ஏற்றத்தாழ்வுகள், கடினமான தவறுகள் மற்றும் கோலடிப்பதற்கான நெருங்கிய வாய்ப்புகள் நிறைந்ததாய் இருந்தது. இத்தாலியின் ஹல்க் போன்ற கோல்கீப்பரான கியான்லூகி டோனாரும்மா, இங்கிலாந்து இளைஞரான புக்காயோ சாகாவின் இறுதி பெனால்டி ஷூட்டை தடுத்தபோது, இத்தாலி வெற்றி பெற்று, இத்தாலி ரசிகர்களின் கொலைவெறிக் கொண்டாட்டத்தை காண நமக்கு வாய்ப்பளித்தது.

மற்றொரு புறம் இங்கிலாந்து அணி வீரர்கள் கண்ணீருடன் கரைந்து போவதைக் காண முடிந்தது. ஆங்கில ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த முடிவு – வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை தந்த உணர்ச்சிப்பெருக்கில் தொடங்கிய இந்த நாள், வெம்ப்லி மைதானத்தில் இருந்து இரவில், லண்டன் மழையில் தடுமாறியபோது நம்பமுடியாத ஆச்சரியமூட்டிய இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்தது.

இந்த வெற்றி யூரோவில் இத்தாலியின் இரண்டாவது வெற்றியாகும். முதலாவது 1968இல் கிடைத்தது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றதனால் இத்தாலி இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. பெனால்டிக்கு, இங்கிலாந்து அணியின் தலைவர், கேன் மற்றும் இத்தாலியி அணியின் தலைவர் சியெலினி ஆகியோர் நடுவர் கைப்பரை டாஸுக்காக சந்தித்தனர்.

கேன் முதல் நாணயச் சுண்டலில் வென்று, இங்கிலாந்து ஆதரவாளர்களுக்கு முன்னால் இருக்கும் கோலைத் தேர்வு செய்தார். இரண்டாவது டாஸில் வென்ற இத்தாலியின் சியெலினி முதலில் பெனால்டி உதை அடிக்கத் தேர்வு செய்கிறார். பெனால்டி உதைகள் இப்படித்தான் தொடங்கின.

இத்தாலி – இங்கிலாந்து

டொமினிகோ பெரார்டி கோல் – ஹாரி கேன் கோல் 1-1
இத்தாலி பெலோட்டி. மிஸ் – ஹாரி மாகுவேர் கோல்1-2
இத்தாலி போனூசி கோல் – மார்கஸ் ராஷ்போர்டு மிஸ் 2-2
இத்தாலி பெர்னார்டெச்சி கோல் – சஞ்சோ மிஸ் 3-2
ஜோர்கின்ஹோ மிஸ் – புக்காயோ சாகா மிஸ்
இதனால் இத்தாலி யூரோ கோப்பையை வென்றது.

இந்த விளையாட்டு ஆரம்பத்தில் 90+6 நிமிடங்கள் ஆடப்பட்டது. கூடுதல் நேரமாக மேலும் 30+4 நிமிடங்களுக்கு விளையாட்டு தொடர்ந்தது. 108ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து இரண்டு தங்க வாய்ப்புகளை இழந்தது. இரண்டாவது நிமிடத்தில் இங்கிலாந்து தனது முதல் கோலையும், 67ஆவது நிமிடத்தில் இத்தாலி சமன் செய்யும் கோலையும் அடித்தன. சிவப்பு அட்டை எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், இத்தாலிக்கு ஐந்து மஞ்சள் அட்டைகளும், இங்கிலாந்து ஒன்றும் கிடைத்தன.

இத்தாலியின் ஜோர்கின்ஹோவின் காயம் காரணமாக 26ஆவது நிமிடத்தில் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்தின் லூக் ஷாவின் முதல் கோல் ஒரு கனவு தொடக்கத்தை அளித்தது. இது யூரோ பைனலில் மிக விரைவான கோலாகும். டிக்கெட் இல்லாத பல ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்தனர், இருப்பினும் மைதானத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அதை மறுத்தனர்.

போலீஸ் பாதுகாப்பு பலமாக இருந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு எலிசபெத் மகாராணி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து அணி வெற்றிபெற வாழ்த்து அனுப்பினர்.

விளையாடிய அணி உறுப்பினர்கள்:
இங்கிலாந்து: ஜோர்டான் பிக்போர்ட்; கைல் வாக்கர், ஜான் ஸ்டோன்ஸ், ஹாரி மாகுவேர்; கீரன் டிரிப்பியர், டெக்லான் ரைஸ், கால்வின் பிலிப்ஸ், லூக் ஷா; மேசன் மவுண்ட், ரஹீம் ஸ்டெர்லிங்; ஹாரி கேன்.

ஸ்பெயினுக்கு எதிரான அரையிறுதி வெற்றிக்காக அவர் அனுப்பிய அணியுடன் ஒட்டிக்கொண்ட இத்தாலியின் ராபர்டோ மான்சினி எந்த மாற்றமும் செய்யவில்லை.

இத்தாலி: கியான்லூகி டோனாரும்மா; ஜியோவானி டி லோரென்சோ, லியோனார்டோ போனூசி, ஜியோர்ஜியோ சியெலினி, எமர்சன் பால்மெரி; நிக்கோலே பரேல்லா, ஜோர்கின்ஹோ, மார்கோ வெராட்டி; ஃபெடரிகோ சிசா, சிரோ இம்மொபைல், லோரென்சோ இன்சைன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version