சிறந்த டாய்லெட் பேப்பர் என்று கூகுளில் தேடினால் பாகிஸ்தான் நாட்டின் கொடியை கூகுள் காட்டுகிறது இதுதான் இப்போதைய சமூகவலைதள ட்ரெண்டிங்
கூகுள் இமேஜ் சர்ச் மிகப்பிரபலமானது. படங்களை தேடுவதற்கு கூகுள் இமேஜில் தேடி எடுப்பது இணையவாசிகளின் பழக்கம். தற்போது கூகுள் இமேஜில் பெஸ்ட் டாய்லெட் பேப்பர் இன் த வேர்ல்ட் என்று தேடும்போது அது பாகிஸ்தான் நாட்டின் கொடிகளை காட்டுகிறது
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் நபர் தனது காரில் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்து மத்திய துணை ராணுவப் படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்! இதில் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்
இதையடுத்து பல்வேறு நபர்கள் இணையத்தில் மேற்கொண்ட தேடுதலில், பாகிஸ்தான் கொடியின் பெயர் டாய்லெட் பேப்பர் ஆக மாறிவிட்டது!
இது போன்று தொடர்பற்ற படங்களைக் காட்டுவது கூகுளில் புதிதல்ல. கூகுள் அல்காரிதம் படி, வார்த்தைக்கும் தேடும் சொல்லுக்கும் வரும் படத்துக்கும் தொடர்பில்லாது இருந்திருக்கிறது! கடந்த வருடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெயரை இட்டுத் தேடியபோது இடியட் என்ற வார்த்தைக்கு பதிலாக டிரம்ப் படம் வந்தது.
அது அப்பொழுது பச்சை நாள் பாடல் அமெரிக்கன் இடியட் என்ற வார்த்தையுடன் உள்ளீடு செய்ததால் வந்த வினை அப்போது லண்டனுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் டொனால்ட் ட்ரம்ப் அதுபோல் இப்போதும் பல்வேறு நபர்களின் தேடுதலால் கூகுளில் டாய்லெட் பேப்பர் க்கு பதிலாக பாகிஸ்தான் கொடி பொரித்த படம் வருகிறது!