― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமோடி குறித்து வலை தளங்களில் வருவது கேள்விகள் அல்ல... வெட்டி புலம்பல்கள்...

மோடி குறித்து வலை தளங்களில் வருவது கேள்விகள் அல்ல… வெட்டி புலம்பல்கள்…

05 June09 PM modi

நரேந்திர மோடி இதற்குப் பதில் சொல்லவில்லை… அதற்குப் பதில் சொல்லவில்லை… என்று வலைத்தள போராளிகள் பதிவுகள் பற்றி உங்கள் கருத்து என்ன மாரிதாஸ்

உண்மையில் இந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்கள் புகார்களுக்கு எப்படியான மதிப்பளிக்கிறது? {கேள்வி : ராதிகா}

மனசாட்சியுடன் நேர்மையாக நடுநிலையான மனதோடு படிக்கவும்…

நாட்டில் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டோம் – இனி ஒவ்வொரு அமைச்சரும் பதில் சொல்லவேண்டும்.. நரேந்திர மோடி பதில் சொல்லவேண்டும்… கேள்வி கேட்பது மக்கள் உரிமை. இப்படியான வசனங்கள் அதிகம் நான் பார்க்கிறேன் எதிர்கொள்கிறேன்.

ஆனால் மக்கள் கேள்வி கேட்போம் என்று facebook , whatsappல் கேள்வி கேட்டுகிட்டு திரிந்தால் என்ன அர்த்தம்?

இதோ பாருங்கள் மோடி ஒழிக என்று கோசம் எல்லாம் இருக்கட்டும் நீங்கள் எத்தனைக் கேள்வி எத்தனைத் துறைகளுக்கு கேட்டு எந்தத் துறையில் இருந்து உங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை என்று கூறுங்கள் – நான் நிச்சயம் உதவுகிறேன். அதை விட்டு விட்டு facebook timeline-ல் கேள்வி கேட்டுவிட்டு பதில் எதிர்பார்பது என்ன விதமான செயல்???இது வரை இந்தியாவில் ஆட்சி செய்த அரசுகளில் மிக வெளிப்படையாகப் புகார்களை வாங்குவதும் , அதற்குப் பதில் கொடுப்பதும் , நிலுவையுள்ள புகார்கள் சார்ந்து சரியான காரணம் வெளிப்படையாக வெளியிடுவதும் நரேந்திர மோடி அரசு தான் மிகச் சிறந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து.

இந்தியா என்ற நாடு ஒரு ராட்சத மெஷின். அந்த ராட்சத மெஷினின் இயக்கம் அதன் பாகங்கள் அதன் செயல்பாடு என்று அனைத்தையும் தெரிந்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும் என்று நான் கூறமாட்டேன் – அதே நேரம் கேள்வி எப்படிக் கேட்கப்படவேண்டும் யாரிடம் கேட்கவேண்டும் என்ற ஒரு சரியான போக்கு இங்கே இல்லை அது படித்த இளையவர்களிடம் சுத்தமாக இல்லை.

Department of Administrative Reforms and Public Grievances(darpg) இதில் பொதுமக்கள் புகார்களைத் தாராளமாக கேட்கவும்.

Department of Pension & Pensioners’ Welfare (dppw) நலத்திட்ட விவகாரங்கள் சார்ந்து எந்தச் சந்தேகம் என்றாலும் இதில் முறையிடவும்.

Directorate of Public Grievances (DPG) இது மத்திய அரசின் கிழ வரும் அலுவலகங்கள் சார்ந்த புகார்களை எடுத்துச் செல்லவும்.

இவை அனைத்தையும் கண்காணிப்பதும் , வெளிப்படையாகப் புள்ளிவிவரங்களை வெளியிடுவதும் Centralized Public Grievance Redress And Monitoring System (CPGRAMS) என்ற தனி அமைப்பு உண்டு. இவை தவிர தனி தனிய அமைச்சரகங்களும் புகார்களை பெறுகின்றன அதற்கு உரிய நேரத்தில் பதில் கிடைக்கக் வழிவகை செய்துள்ளது மோடி தலைமையிலான அரசு.

மனசாட்சி தொட்டு கொஞ்சம் யோசிக்கவும் – போலிஸ் நிலையங்கள், பாஸ்போர்ட் அலுவலகம் தொட்டு அரசின் அனைத்து அமைப்புகளையும் வெளிப்படையாகப் புகார்களை பெறவும் – அதன் நிறுவி நிலவரங்கள் காரணங்கள் பெறவும் வேகபடுத்திய இதே நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு தான். இது உண்மை இல்லையா??? நேர்மையாக யோசிக்கவும்.

இதன் காரணமாக நாட்டில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்குப் புகார்கள் பெறுவதும் அதன் மீது நடவடிக்கைகள் எடுப்பதும் வேகம் பிடித்துள்ளது. உரியப் புகார் என்றால் நாம் தான் சரியான வைகையில் எடுத்துச் செல்ல வேண்டும். அது ஒரு குடிமகனாக நம் கடமை சரி தானே??? ஆனால் facebook , twitter என்று உக்காந்து கொண்டு எதையாது பேசி அரசை நானும் கேள்வி கேட்டேன் என்று பதிவுகள் போடுவது என்னவிதமான ஆரோக்கியமான செயல் கூறுங்கள்????

மன்மோகன் அரசு விட்டுச் செல்லும் போது முக்கியமான துறைகள் மட்டுமே online புகார் பெற்றன. மற்றவை நேரில் சென்று தான் கொடுக்க வேண்டும். ஆனால் இன்று???? ஏறக்குறைய அனைத்து அரசுத் துறைகளையும் நரேந்திர மோடி வெளிப்படையாகப் புகார் வாங்க வழிவகை செய்துள்ளார் அதன் காரணமாக என்ன சாதித்தார் தெரியுமா???

2014ல் வெறும் 3,01,151 புகார்கள் பெற்ற நிலையை மாற்றி – 2017ல் அறிக்கை படி 17,97,363புகார்கள் பெற்று அதில் 16,64,388புகார்கள் தீர்க்கப்பட்டு – மீதம் உள்ளவற்றுக்கு தகுந்த காரணங்கள் கூறப்பட்டு இருக்கின்றன. இது ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய சாதனை இல்லையா???

எனவே கேள்விகள் கேளுங்கள். தாராளமாக – அதற்கு முன் எந்த விசயத்திற்கு யாரிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கேளுங்கள். நேரடியாக President Secretariat Office, PMO Office
கதவைத் தட்டுவதும் – நரேந்திர மோடி அவர்கள் அலுவலக பூட்டை ஆட்டுவதுமாக இருப்பது என்னவிதமான செயல்???

முடிவாக :

ஸ்டெர்லைட் மூடவும் , கெயில் மூடவும் , ஹைட்ரோகார்பன் மூடவும் இதை எல்லாம் ஏன் மூடவில்லை என்று கேட்டு புகார் அனுப்பவேண்டாம். அது எல்லாம் மூட அவரிடம் எந்த அதிகாரமும் இல்லை. 15000கோடி முதலீடு போட்டு திட்டம் ஆரம்பம் ஆகும் அதை மக்கள் தேர்வு செய்த மாநில அரசுகளான இரண்டு திராவிட கட்சியும் அனுமதி அளிக்கும் – காங்கிரஸ் அதை முன்னெடுக்கும். கடைசியாக நரேந்திர மோடி வந்து மூடச் சொன்னால் மூட வேண்டும் , திறக்கச் சொன்னால் திறக்கவேண்டும் என்றால் இது என்ன நாடா இல்லை வேறு ஏதுவுமா??? இங்கே முதலீடு செய்த நிறுவனங்களுக்கும் முழு உரிமை உண்டு தங்கள் முதலீட்டைக் காப்பற்ற.. மக்கள் பயத்தை கிளப்பிவிட்டு மூட வேண்டும் என்றால் அதற்கு நீதி மன்றம் தான் பதில் சொல்லவேண்டுமே தவிரப் பிரதமர் அல்ல. அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது இந்தத் திட்டங்களை மூடச் சொல்ல. நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் இந்த விவகாரங்களை.

எனவே இதை நன்கு தெரிந்து வேண்டும் என்றே நரேந்திர மோடி அவர்கள் பெயரை கெடுக்கத் திராவிட கட்சிகளும் , வெக்கமே இல்லாமல் அதில் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் நிற்க உண்மைக்கு மாறாக இங்கே செய்திகளும் விவாதங்களும் நடக்கின்றன.

மிக எளிமையாகக் கூறினால் “நீங்கள் 10லட்சம் போட்டு ஒரு கடை ஆரம்பிக்க – அதை அந்தப் பகுதி மக்களைத் தூண்டி விட்டு எவனாது எதிர்ப்பு தெரிவிக்க சொன்னால் – அரசு மூட வேண்டும் என்று உத்தரவு இட முடியுமா???? உங்கள் முதலீட்டைக் காப்பாற்ற நீங்கள் அதை எதிர்த்து நீதிமன்றம் போக உங்களுக்கும் உரிமை உண்டு தானே????? எனவே இதை மூட வேண்டுமா வேண்டாமா என்பது இருபக்க விவாதம் மூலம் நீதிமன்றம் தான் முடிவு செய்யும் தவிர அரசுக்கு இங்கே நீதிமன்றம் சொல்படி செய்யத் தான் வேலை…”.

132கோடி மக்கள் உள்ள நாடு நம் நாடு. எனவே அதற்குத் தக்க பொறுப்புடன் செயல்பட ஆட்சியருக்கு ஒரு பக்க கடமை உள்ளது என்றால் குடிமகனாக நமக்கும் சில வரைமுறைகள் உண்டு… எனவே இனி நேரடியாக மோடி இதற்குப் பதில் கொடுப்பாரா அதற்குப் பதில் கொடுப்பாரா என்று கேட்பதை விட அந்த அந்தத் துறைகளில் புகார்களைத் தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பித்து – உரியப் பதில் கிடைக்காத போது நிச்சயம் PMO அலுவலகத்தை முறையிடவும்.

எனவே நரேந்திர மோடி அவர்களின் அரசு மக்கள் குறைகளை கேட்பதில் எனக்குத் தெரிந்து சரியாகவே இன்னும் சொல்வதானால் மிக சிறப்பாகவே செயல்படுகிறது என்பது தான் உண்மை…

“பிகாரில் – எதோ ஒரு கிராமத்தில் ஒரு சிறுமி இறந்த செய்திக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என்று அருகேயுள்ள போலீஸ் நிலையம் , கலெக்டர் , அமைச்சர் , முதல்வர் என்று எல்லாரையும் விட்டு விட்டு நேர பிரதமர் என்று கிளம்புவது இங்கே அதிகரித்துவிட்டது”.

எனவே இங்கே வலைதளங்களில் வருவது கேள்விகள் அல்ல – வெட்டி புலம்பல்கள்… தீர்வு தேடுபவன் எவனாது இங்கே வந்து புலம்பிட்டு அடுத்த நாள் திரை விமர்சனம் எழுதி கேலி பேசி திரிவானா?? இவ்வளவு தான் இந்த இணைய போராளிகள் குணம்.

-மாரிதாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version