― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeவணிகம்ரியல்மி ஸ்மார்ட் டிவி X ஃபுல் ஹெச்டி.. சிறப்பம்சங்கள்..!

ரியல்மி ஸ்மார்ட் டிவி X ஃபுல் ஹெச்டி.. சிறப்பம்சங்கள்..!

Realmy Smart TV X Full HD

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் குறுகிய காலத்தில் ஸ்மார்ட் டிவிகளின் நல்ல போர்ட்ஃபோலியோவை உருவாக்கி இருக்கிறது.

இந்நிறுவனம் ரூ.13,000 முதல் ரூ.49,000 வரையிலான ஐந்து டிவி மாடல்களைக் அறிமுகப்படுத்தி இருக்கிறது, மேலும் இந்தியாவில் மற்றொரு டிவியையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. ரியல்மி நிறுவனம் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் ஒரு புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த இருக்கிறது.

ரியல்மியின் புதிய அறிமுகமான டிவியானது ரியல்மி ஸ்மார்ட் டிவி X ஃபுல் ஹெச்டி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த டிவி இந்தியாவில் ஏப்ரல் 28-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

2020-ல் ரியல்மி ஆண்ட்ராய்டு மென்பொருளுடன் கூடிய டிவியை அறிமுகம் செய்தது. தற்போது வரும் ரியல்மியின் ஸ்மார்ட் டிவி 4கே ஆனது, 43 இன்ச் மற்றும் 50 இன்ச் அளவுடன் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

ரியல்மி ஸ்மார்ட் டிவி 4கே Realme Smart TV 4K ஆனது ஆண்ட்ராய்டு 9 உடன் டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மற்றும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ கூகுள் அசிஸ்டன்ட் போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.

இந்த ரியல்மி டிவியின் முக்கிய அம்சங்கள் குறித்து தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் இது மெல்லிய பெசல்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஒருவேளை டால்பி அட்மோஸ், டால்பி விஷன் கொண்ட பேனல் மற்றும் புதிய ஆண்ட்ராய்டு மென்பொருளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி இந்தியாவில் ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனை மார்ச் மாதம் இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஜனவரியில் அல்ட்ரா பிரீமியம் போனாக வந்தது. கடந்த மாதம் யூரோப்பியாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2022-ல் ரியல்மி கலந்து கொண்டது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஆனது 3216×1440 பிக்சல்கள் மற்றும் 120Hz அடாப்டிவ் அப்டேட்டுடன் 6.7 இன்ச் சாம்சங் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டு வருகிறது.

இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதில் 12 ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது.

ரியால்மி ஜிடி 2 ப்ரோ-ல் 50-மெகாபிக்சல் Sசோனி ஐஎம்எக்ஸ்766 கேமரா, 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 3-மெகாபிக்சல் மைக்ரோஸ்கோப் கேமரா உள்ளது. 65W அதிவேக சார்ஜிங் வசதியுடன், 5000எம்எஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version