― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்கருப்பு கடவுள் என்று சொல்லி கொள்ளும் பிக்பாஸ் பிரபலம்! ஃபோட்டோஸ பார்த்த அவலம்!

கருப்பு கடவுள் என்று சொல்லி கொள்ளும் பிக்பாஸ் பிரபலம்! ஃபோட்டோஸ பார்த்த அவலம்!

மாடல் அழகியான இவர், லண்டனை சேர்ந்தவர்.

சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகை கையில் ஆட்டுத்தலையுடன் கிளாமர் உடையில் தன்னை கறுப்புக் காளி என கூறி போஸ்ட் செய்த போட்டோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

f32657f20d4c0b1a7ab47d2109d35683

இந்தி பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்று பிரபலமானவர் சோபியா ஹயத்.முன்னாள் மாடல் அழகியான இவர், லண்டனை சேர்ந்தவர்.

ஆங்கில படங்கள் மற்றும் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 2017ஆம் ஆண்டு தனது காதலரை திருமணம் செய்து கொண்ட இவர், ஒராண்டுக்குள் அவரை விவாகரத்து செய்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சோபியா, தொடர்ந்து தனது கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதோடு மோசமான உடையில் தன்னை பெண் கடவுள் என்றும் கூறி வருகிறார். செக்ஸ் குறித்து ஆர்வமாக பேசி வரும் சோபியா ஹயத் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அண்மையில் ஓம் மந்திரத்திற்கு முன்பு நிர்வாணமாக நின்று போஸ் கொடுத்தார் சோபியா ஹயத். இது பெரும் சர்ச்சையானது. இதனால் சமூக வலைதளங்களில் கடுமமையாக விமர்சிக்கப்பட்டார். பல இந்து அமைப்புகள் அவர் மீது போலீஸில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன் பிறகும் அடங்காத சோபியா ஹயத், பின்னர் பேருக்கு உடை உடுத்திக் கொண்டு பெண் கடவுளை போல் போஸ் கொடுத்தார். சத்தியம் சிவம், சுந்தரம் என்ற மந்திரத்துடன் மொத்த உடம்பையும் காட்டினார். அவரது இந்த பதிவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சி போட்டோவை போட்டு ஏழரையை கூட்டியுள்ளார். கறுப்பு நிற பிகினி போன்ற உடையில் முழு தொடையை மற்றும் மார்பையும் காட்டி, செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் தலையில் பறவையின் இறகை கிரீடம் போல் சுமந்திருக்கிறார். அதோடு கையில் முத்ராவுடன் கடவுளை போல் போஸ் கொடுத்துள்ளார். அதற்கு கறுப்பு பெண் கடவுள் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விளாசியுள்ளனர்.

மற்றொரு போட்டோவில் கையில் ஆட்டுத் தலையுடன் செம மிரட்டும் வகையில் போஸ் கொடுத்துள்ளார். அனுபிஸ் மற்றும் ஐஸிஸ் என்ற எகிப்து கடவுளையும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

 

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version