― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்போட்டுருக்காங்க ஒரு டிரஸ்.. ஆன எந்த பயனும் இல்ல!

போட்டுருக்காங்க ஒரு டிரஸ்.. ஆன எந்த பயனும் இல்ல!

அதிக அளவிலான ஹாட் புகைப்படங்களை களமிறக்கி பாலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் இந்த சனம் ரே நாயகி.

மும்பை: பாலிவுட்டில் கடந்த இரண்டு நாட்களாக அடுத்தடுத்த சோகங்கள் ஏற்பட்டதால், கவர்ச்சிக்கு குட்பை சொல்லியிருந்த ஊர்வசி ரவுத்தேலா, மீண்டும் பீஸ்ட் மோடுக்கு மாறியுள்ளார்.

570f80dafbe2cdb67b9336b73c792191

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த லாக்டவுன் நேரத்தில் அதிக அளவிலான ஹாட் புகைப்படங்களை களமிறக்கி பாலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் இந்த சனம் ரே நாயகி.

நடிகர்கள் இர்ஃபான் கான் மற்றும் ரிஷி கபூருக்கு கடந்த இரண்டு நாட்களாக தனது இரங்கலை தெரிவித்து வந்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா, இன்று மீண்டும் தனது பீஸ்ட் மோடுக்கு மாறியுள்ளார். பிங்க் நிற உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் தனது புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

 
இரு பிரபல நடிகர்கள் மறைந்த துக்கத்தில் இருந்த பாலிவுட் ரசிகர்களுக்கு, திரும்பவும் கவர்ச்சி சூறாவளி ஊர்வசி ரவுத்தேலாவின் கிளாமர் புகைப்படங்களை காணும் பாக்கியம் கிடைத்தவுடன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். சில குசும்பு பிடித்த நெட்டிசன்கள், இது உள்ளாடையா? அல்லது மேலாடையா? எனக் கேட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

லாக்டவுன் நேரத்தில் ஜிம்முக்கு போக முடியாமல் கஷ்டப்படும் பல பிரபல நடிகைகளை போல ஊர்வசி ரவுத்தேலாவும் தனது ஜிம் டைமை ரொம்பவே மிஸ் செய்து வருகிறார். சமீபத்தில், தனது ஜிம்மில் எடுத்த த்ரோபேக் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு, இன்ஸ்டா ரசிகர்களை உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 சமீபத்தில் சனம் ரே படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ஒன்று 600 மில்லியன் ஹிட்களை பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து இருந்த ஊர்வசி ரவுத்தேலா, நேற்று ரிஷி கபூரின் மறைவை ஒட்டி சனம் ரே படத்தில் அவருடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நடிப்பு ஜாம்பவானான அவருடன் எப்படி நடிக்கப் போகிறேன் என முதலில் பயந்ததாகவும், பின்னர், அவரது வார்த்தைகள் தனக்கு ஊக்கத்தை அளித்ததாகவும் கூறியுள்ளார்.
 

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version