― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்வெளியீட்டிற்கு தயாராக...  காசு செலவழிக்காம ஒரு கன்னடபடம்!

வெளியீட்டிற்கு தயாராக…  காசு செலவழிக்காம ஒரு கன்னடபடம்!

ஒரு கதை என்னிடம் தயாராக இருந்தது. பணமே செலவு செய்யாமல் படம் எடுக்க திட்டமிட்டேன்.

அதிகபட்சமாக 10 லட்சம் வரை செலவு செய்து எடுக்கப்பட்ட படம் பற்றி செய்திகள் வந்தது. முதன் முறையாக பைசா செலவில்லாமல் ஒரு கன்னடப் படத்தை எடுத்துள்ளார்கள். படத்தின் டைட்டில் மதுவே ஊடா. இதனை மகேஷ் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒரு கதை என்னிடம் தயாராக இருந்தது. பணமே செலவு செய்யாமல் படம் எடுக்க திட்டமிட்டேன். அதிக படப்பிடிப்புகள் நடக்காத ஆடி மற்றும் மார்கழி மாதங்களில், படப்பிடிப்பு நடத்தினேன். ஒரு வீடு, ஒரு அறை, டீக்கடை, சாலைகள் போன்ற இடங்களைப் படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுத்தேன்.பெங்களூருவில் ஸ்டூடியோ வைத்திருக்கும் நண்பர்,

0704576c6af13cde3a8ac5098202cb84

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இலவசமாக கேமரா கொடுத்து உதவினார். ஞாயிற்றுக்கிழமை உட்படத் தொடர்ந்து 25 நாட்கள் வேலை செய்தோம். காலை 6 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை மட்டுமே படப்பிடிப்பு பெரும்பாலும் நடந்தது. எனவே நடிகர்கள் அவரவர் அலுவலக வேலைகளுக்குச் சென்று விடுவார்கள். டப்பிங், இசை சேர்ப்பு போன்ற விஷயங்களும் இதே போல நண்பர்கள் உதவியால் இலவசமாக முடிந்தது.

படத்தில் மொத்தம் 10 நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவிலும் சிலரே இருந்தார்கள். அனைவரும் இலவசமாக வேலை செய்தார்கள். வெளியிட தயாராக இருந்தபோது ஊரடங்கு அமலுக்கு வந்தது. இப்போது படத்தை விளம்பரம் செய்து வருகிறோம். ஊரடங்கு காலம் முடிந்ததும் படத்தை வெளியிடுவோம். என்கிறார் மகேஷ்.

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version