சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி..

சினி நியூஸ்

chitra

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி தொடரில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்தார்.

சென்னை புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் தினமும் திருவான்மியூர் வந்து செல்ல முடியாது என்பதால் நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர தங்கியியிருந்தார். அந்த ஹோட்டல் அறையில்தான் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

4 மாதங்களுக்கு முன்பு ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவரும், அதே ஹோட்டலில் சித்ராவுடங் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்கு வந்துள்ளார் சித்ரா.

chitra

அப்போது தான் குளிக்கப்போவதாக கூறி ஹேமந்தை வெளியே காத்திருக்க சொல்லியிருக்கிறார். ஹேமந்தும் வெளியே காத்திருந்துள்ளார். ஆனால், நெடுநேரம் ஆகியும் அவர் கதவை திறக்கவில்லை. தட்டிப்பார்த்தும் பதில் இல்லை. எனவே, அதிர்ச்சி அடைந்த ஹேமந்த் மாற்று சாவி கொண்டு திறந்து உள்லே சென்று பார்த்த போது புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். போலீசார் சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சித்ராவின் தற்கொலை சின்னத்திரை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்ரா ஏன் தற்கொலை முடிவெடுத்தார் என்பது பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.