
காரைக்குடி ராஜராஜன் பொறியியற் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது
காரைக்குடியில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல்&தொழில்நுட்பக் கல்லூரியில் சக்தி ஆட்டோ காம்பொனன்ட் லிமிடெட் சார்பில் வேலை வாய்ப்பு வளாகத் தேர்வு நடந்தது
ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல்&தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எவலைசன்கரீர்ஸ் நிறுவனம் இணைந்து நிகழ்த்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் சக்தி ஆட்டோ காம்பொனன்ட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் தமிழரசன், அகில் குமார்மற்றும் ஹஷிதா ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு வளாகத் தேர்வை நடத்தினர்.
இதில் பி.இ.மெக்கானிக்கல்,பி.இ.மின்னியல்மற்றும்மின்னணுவியல் பி.இ. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் இறுதியாண்டு பயிலும் இருபத்து ஆறு மாணவர்கள் பங்கு பெற்றனர்.
எழுத்துத் தேர்வு ,டெக்னீகள் நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்வில் 22 மாணவர்கள் வெற்றி பெற்று பணி நியமன ஆணைகளை பெற்றனர்.
பணி நியமன ஆணைகளை பெற்ற மாணவர்கள் அனைவரையும் கல்லூரியின் ஆலோசகர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் டாக்டர் சுப்பையா,கல்லூரியின்துணைமுதல்வர்திரு.மகாலிங்கசுரேஷ்மற்றும் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.சுந்தர விக்னேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.