― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுஅப்பாச்சி தீர்வு: தேமல், தொழுநோய், சொறி சிரங்கு..!

அப்பாச்சி தீர்வு: தேமல், தொழுநோய், சொறி சிரங்கு..!

health tips

தேமல்

பேரீச்சம் பழத்தைத் தேமல் உள்ள இடங்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் தோலில் காணும் தேமல் அகலும். ஆனால் தொடர்ந்து செய்து வருவது அவசியம்

நான்கு வெள்ளை பூண்டையும், நான்கு வெங்காயத்தையும் அம்மியில் வைத்து நன்றாக அரைக்க வேண்டும். அதை தேமல் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். அது காய்ந்து விழுந்தவுடன் அந்த இடத்தை தண்ணீரால் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து 21 நாட்கள் செய்துவர தேமல் அகன்றுவிடும். அறிப்புகள், தடிப்புகள்

காலை, பகல், இரவென தினசரி மூன்று வேளை ஒரு வெற்றிலையில் மூன்று மிளகை வைத்து நன்றாக மென்று உண்ண வேண்டும். இவ்விதம் பல நாட்களுக்குச் செய்தால் உடலில் காணும் அரிப்பும், தடிப்பும் குணமாகும்.

அல்லது மூன்று வெற்றிலைகளைக் கசக்கியும், ஒன்பது மினகைப் பொடி செய்தும் 4000 மி.லி. தண்ணீரில் போட்டு அடுப்பிலேற்றிக் காய்ச்ச வேண்டும். பாதி அளவு சுண்டுமாறு கஷாயம் தயாரித்து அதை மூன்று பாகங்களாகப் பிரித்து மூன்று வேளை குடித்து வர உடலில் காணும் தடிப்உம், அரிப்பும் அகலும்.

அல்லது 100 மி.லி. நல்லெண்ணையுடன் 200 மி.லி. கண்ணாம்பின் தெளிவு நீரை சேர்த்துக் கலந்து உடலெங்கும் பூச வேண்டும். கசகசாவை தண்ணீர் விட்டு அரைத்து ஏற்கெனவே பூசியதன் மேல் பூசினால் உடன் குணமாகும்.

ஆரம்பகால தொழுநோய்

வேப்பம் பழத்தை 48 நாட்கள் தினமும் இருவேளை உண்டுவர ஆரம்பகால தொழுநோய் அகல்கிறது.

சொறி, சிரங்கு அகல

கடைகளில் கிடைக்கும் பொடித்த வெடியுப்பு அரை கரண்டி வாங்கி அதனோடு எலுமிச்சம் பழத்தின் சாற்றைக் கலந்து சொறிசிரங்கின் மேல் தடவி வர அவைகள் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version