― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஅம்மாடியோ... எத்தன பாம்புகள்... அதுவும் வீட்டு சுவர்ல இருந்து...? எப்படித்தான் வாழ்ந்தாங்களோ?!

அம்மாடியோ… எத்தன பாம்புகள்… அதுவும் வீட்டு சுவர்ல இருந்து…? எப்படித்தான் வாழ்ந்தாங்களோ?!

snakes in house well

அம்மாடியோ…! அந்த வீட்டிலிருந்து எத்தனை பாம்புகள்…! ஓ.. அவர்கள் என்ன பார்த்தார்கள் தெரியுமா? வீட்டுச் சுவரில் இருந்து வெளிவந்த 63 பெரிய பெரிய பாம்புகள். கிராமத்தார் அடித்துக் கொன்றனர். அங்கேயே நூற்றுக்கும் அதிகமான பாம்பு முட்டைகள் தென்பட்டதால் அவற்றையும் அழித்தனர்.

சாதாரணமாக நமக்கு எப்போதோ ஒருமுறை பாம்பு கண்ணில் படும். எங்காவது வீட்டிற்குள் பாம்பு நுழைந்தாலே பயத்தால் இறந்து போவார்கள் மக்கள். ஆனால் அப்படி இருக்கையில் ஒரு வீட்டில் ஒரேடியாக 63 பாம்புகள் வெளிப்பட்டன. அதனால் வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்ல. ஊர் மொத்தமும் பயத்தால் நடுங்கியது.

இந்த சம்பவம் காமாரெட்டி மாவட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காமாரெட்டி மாவட்டம் பிக்கனூரு மண்டலம் இசன்னபல்லி கிராமத்தில் கும்மரி பூமய்யா என்பவர் வெள்ளிக்கிழமை இரவு தன் குடும்பத்தாரோடு சேர்ந்து வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் வீட்டுச் சுவரில் ஒரு சிறு துவாரத்திலிருந்து ஒரு பாம்பு வெளி வந்தது.

அதனை கவனித்த குடும்பத்தார் ஓட்டமாக ஓடி அண்டை அயலாரை அழைத்தனர். அவர்கள் வந்து அந்த சுவரையே தோண்டியதில் அங்கிருந்து பாம்புகள் கும்பல் கும்பலாக வெளிவந்தன. அதனால் ஒரேடியாக அவர்கள் அனைவரும் பயத்தால் நடுக்கம் எடுத்தனர். உடனே எச்சரிக்கை அடைந்து 63 பாம்புகளையும் கொன்று குவித்தனர். அதோடுகூட நூற்றுக்கும் மேலாக முட்டைகளும் தென்பட்டதால் அவற்றையும் அழைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

snakes in house1

சில நாட்களுக்கு முன்பு மேதக் மாவட்டம் சின்ன சங்கரன் பேட்டை மண்டலம் கவலபல்லி கிராமத்தில் கொங்க லச்சல், அவர் மனைவி சொரூபாவோடு வசித்து வருகையில் வீட்டில் இருந்த சிமெண்ட் பலகைகளை நகர்த்தியபோது 50 க்கும் அதிகமாக பாம்பு குட்டிகள் வெளிவந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நாட்களிலேயே காமாரெட்டி மாவட்டத்தில் 67 பாம்புக் குட்டிகள் வெளிவந்தன. இதனால் மக்கள் வீடுகளில் இருப்பதற்குக் கூட பயப்படுகின்றனர்.

புதிதாக அதே மாவட்டத்தில் சுவரில் இருந்த சிறிய துவாரத்திலிருந்து பாம்புக்குட்டி அல்ல… பெரிய பாம்பே வெளிவந்ததை பார்த்த வீட்டார் பயந்து நடுங்கி வெளியில் ஓட்டம் எடுத்தனர். அவர்களின் கூச்சலை கேட்டு அந்தப் பாம்பு மீண்டும் அதே துவாரத்திற்குள் நுழைந்துவிட்டது. அந்தப் பாம்பு மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வெளிவரும்… தம்மை கடித்துவிடும் என்று அஞ்சிய கும்மரி பூமய்யா அண்டை அயலாரின் உதவியோடு சுவரை இடித்தபோது 63 பாம்புகளும் நூற்றுக்கும் அதிகமான முட்டைகளும் வெளிவந்தன.

ஆனால் வெயில் காலமானதால் பாம்புகள் எல்லாம் வீட்டைத் தேடி வருகின்றன என்று மக்கள் அச்சம் அடைகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version