― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்சுய.. நடுவிரலை பற்றி நச்சுன்னு பதிவிட்ட அமலாபால்! கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சுய.. நடுவிரலை பற்றி நச்சுன்னு பதிவிட்ட அமலாபால்! கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

இரண்டாவது திருமணம் குறித்த அறிவிப்பு நிச்சயம் விரைவில் அறிவிக்கப்படும்

ஹீரோயின்கள் என்றாலே அவர்களை சுற்றி எப்போதுமே பல விதமான சர்ச்சைகள் சூழ்ந்து கொண்டு இருப்பது எந்த மாதிரியான டிசைனோ தெரியவில்லை. இந்த விஷயத்தில் நடிகை அமலா பால்  அதிகமாகவே ஸ்கோர் செய்து வருகிறார். போல்டாக நடிப்பது மட்டுமின்றி போல்டாகவும் பேசுவதிலும் அமலா பால் தனி கெத்தை காட்டி வருகிறார்.

92c11bcb8acfd4d8ce433247a4329e9f
நடிகை அமலா பாலுக்கும், மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்குக்கும் திருமணம் நடந்ததாக புகைப்படங்கள் வெளியான நிலையில், அமலா பால் தரப்பு அதனை முற்றிலுமாக மறுத்துள்ளது. தனது இரண்டாவது திருமணம் குறித்த அறிவிப்பு நிச்சயம் விரைவில் அறிவிக்கப்படும் என ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு
பேட்டியளித்துள்ளார்.


சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சுதந்திரத்தை பற்றி தத்துவமாக பொழிந்து இருந்தார் நடிகை அமலா பால். அவரது பதிவை பார்த்த நடிகர் விஷால், நீங்க ஒரு சிறந்த நடிகை, உங்க தொழில் தான் உங்களுக்கு சுதந்திரத்தை தரும் என அட்வைஸ் செய்திருந்தார். 

இந்நிலையில் தற்போது தனது புதிய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமலா பால், சுய அன்பு என்பது நடு விரல் போன்றது என பதிவிட்டுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அமலா பாலின் இந்த பதிவு சூப்பர் என்று அவரது ரசிகர்களும், ஏன் இப்படி கொச்சையாக பதிவிட ஆரம்பிச்சுட்டீங்க


உங்களுக்கு என்ன பிரச்சனை என்று நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதே போல் நடிகை ஸ்ரீரெட்டியும் நடுவிரல் பற்றி பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version