இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹாஸ் கோப்பையின் 5வது போட்டி இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஸ்கோர் விபரம்:
இந்திய அணி 176/3 20 ஓவர்கள்
ரோஹித் சர்மா 89 ரன்கள்
தவான் 35 ரன்கள்
ரெய்னா 47 ரன்கள்
வங்கதேச அணி 159/6
ரஹிம் 72 ரன்கள்
ரஹ்மான் 27 ரன்கள்
ஆட்டநாயகன்: ரோஹித் சர்மா
இந்த தொடரின் அடுத்த ஆட்டம் வரும் 16ஆம் தேதி இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோதும்.