4 நாட்களாக நீடித்து வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

சற்றுமுன் சென்னை தமிழகம்
c vijayabhaskar - 2026

4 நாட்களாக நீடித்து வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப் பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

அரசு மருத்துவர்கள் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய அதிகாரி ஏற்கனவே நியமனம். சுகாதார திட்டப் பணிகள் இயக்குநர் செந்தில்ராஜ் ஆய்வு செய்வார் எனவும் அரசு அறிவித்திருந்தது.

பட்ட மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு, சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நீடித்தது.

தமிழக சுகாதாரத்துறையின் சாதனைக்கு மருத்துவர்களும், செவிலியர்களுமே காரணம் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.