மீண்டவருக்கு மீண்டும் தொற்று! அதிர்ச்சி தகவல்!

corono - Dhinasari Tamil

பெங்களூருவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவருக்கு, மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு, கடந்த ஜூலை 6ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குணமடைந்ததையடுத்து, ஜூலை 24ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கடந்த மாதம் (ஆகஸ்ட்) மீண்டும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிகழ்வு, அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுதொடர்பாக, கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தர் கூறியதாவது, கொரோனா பாதித்தோருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுவது அரிதானது. அதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட தேவை இல்லை. இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாட்களில், வீடு திரும்பிய சிலருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டதை நாங்கள் பார்த்தோம்.

கொரோனா பாதித்தோரின் உடலில் ஆன்ட்டிபாடி எவ்வளவு காலம் இருக்கும் என்பதை தான் நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலானோர், ஆன்ட்டிபாடி பரிசோதனை செய்து கொள்வது இல்லை. அதனால் அவர்களின் உடல்களில் இந்த ஆன்ட்டிபாடி உருவாகி இருக்கிறதா இல்லையா என்பது தெரிவது இல்லை. இவ்வாறு ஜாவித் அக்தர் கூறினார்.

ஜெயதேவா அரசு இதய நோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மஞ்சுநாத் கூறுகையில், ‘கொரோனா பாதித்தோருக்கு ஆன்ட்டிபாடி குறைவான நாட்கள் மட்டுமே இருந்தால் அத்தகையவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்று மீண்டும் பாதிப்பு ஏற்படுவது அரிதானது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow Dhinasari on Social Media

19,099FansLike
379FollowersFollow
74FollowersFollow
0FollowersFollow
3,868FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-
Exit mobile version