Home சற்றுமுன் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, உதவி, பிறரிடம் அக்கறை.. அனைத்திற்கும் அர்த்தம் அஜித்!

தன்னம்பிக்கை, கடின உழைப்பு, உதவி, பிறரிடம் அக்கறை.. அனைத்திற்கும் அர்த்தம் அஜித்!

ajith
ajith

அஜித் அமராவதி' மூலம் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோவாக அறிமுகமானது, ஆசை நாயகனானது, பிறகு காதல் மன்னனாக மாறி தமிழ் சினிமாவின்தல’யான வரலாறு எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.

ஆனால், இணைய தலைமுறைக்கு அஜித் 2010-க்குப்பிறகுதான் பிரபலம். அப்போதுதான் இணையத்தில் அஜித்துக்கான செல்வாக்குப் பலமடங்கு உயரத்தொடங்கியது. அதுவும் 2011-ல் அவர் ரசிகர் மன்றங்களைக் கலைத்தப்பிறகுதான். 2011-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளுக்கு முன்பாக ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அறிவித்தார் அஜித். ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிட்டு, ரசிகர்களைச் சந்திப்பதையும் குறைத்துக்கொண்டார். 2013-ம் ஆண்டுக்குப்பிறகு மீடியாக்களுக்குப் பேட்டி கொடுப்பதையும் முழுவதுமாகத் தவிர்த்துவிட்டார். ஆனால், இந்த 10 ஆண்டுகளில்தான் அஜித் எனும் பிம்பம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. 90’ஸ் ரசிகர்களைவிட, 2கே கிட்ஸ் அஜித்தை இன்னும் உச்சத்தில் ஏற்றிவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். 25 ஆண்டுகள்.. 58 படங்கள் என இன்று தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார்.

ஒவ்வொரு முறை வீழும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து முன்பிருந்ததை விட பெரிய ஹிட் கொடுப்பது அஜித்தின் ஸ்டைல். அந்தவகையில் 2007-ம் ஆண்டு பில்லா படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்து தான் விட்டுச்சென்ற சிம்மாசனத்தில் மீண்டும் ஒய்யாரமாக ஏறி அமர்ந்தார் அஜித்.

ஆரம்பம் முதலே அஜித்தை பிடிக்க அவரது ரசிகர்கள் சொல்லும் காரணங்களில் முதன்மையானது அவருடைய தன்னம்பிக்கையும் துணிச்சலும். ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு ரசிகர் மன்றங்களை கலைத்து, கலைஞர் பாராட்டு விழாவில் தன்னை வற்புறுத்தி வர சொன்னதாக பேசியது என அஜித்தின் இந்த நடவடிக்கைகள் அவரது துணிச்சலுக்கு எடுத்துக்காட்டுகள்.

நடிப்பைத் தாண்டி விளையாட்டுத் துறையிலும் சாம்பியனாகவே அஜித் வலம்வருகிறார். முறைப்படி கார் பந்தயத்தில் பங்கேற்ற அவர், 2002-ம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற ஃபார்முலா மாருதி சாம்பியன்ஷிப் போட்டியில் 4-ம் இடம் பிடித்து அசத்தினார்.

அதேபோல் சென்னை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு முறை தனது குழந்தைக்கு பெயர் வைக்க கேட்டுக்கொண்டார் ஒரு தாய். நீங்கள் பெற்ற குழந்தைக்கு பெயர் வைக்கும் முழு உரிமையும் உங்களுக்கே. அதை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள் என்று அவரின் தன்மான உரிமையை அவருக்கே புரிய வைத்தார். தனக்காக எதையும் செய்ய துணியும் ரசிகர்கள் இருந்தாலும் அவர்களை தன் சுயநலத்துக்காக தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்காக ரசிகர் மன்றங்களை கலைத்தார். பவர் ஸ்டார் என தனக்குத்தானே பெயர்கள் சூட்டிக் கொள்பவர்கள் மத்தியில் தனக்கிருந்த அல்ட்மேட் ஸ்டார் பட்டத்தை துறந்தவர். என் ரசிகர்களும் மக்களும் என் படத்தை பார்க்க விரும்பினால் வந்து பார்க்கட்டும். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டேன். எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்த மாட்டேன். மக்களுக்கு பிடித்தால் அவர்கள் வாங்கி கொள்ளட்டும். நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன். மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசிவிடுபவர். சில நேரங்களில் சர்ச்சைகளிலும் மாட்டிக் கொண்டுள்ளார். ஒருவருடன் போனில் பேசும்போது உங்களிடம் நான் பேச இது சரியான நேரமா? என கேட்ட பிறகுதான் பேச ஆரம்பிப்பார். தான் நடித்த படம் வெளியான பிறகு ரிசல்ட் தெரிந்துக் கொண்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார். படம் முடிந்து சந்தைக்கு வந்து விட்டது என்பார். இமேஜ் பற்றி கவலை படாமல் படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நரைத்த முடியுடன் நடித்து வருபவர். எந்த இந்திய நடிகரும் செய்யாததை துணிச்சலுடன் செய்து வருபவர்.

மாறி வரும் காலகட்டத்தில் பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கெளரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கெளரமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனக்குப் பிறந்தநாள் பரிசாகும்.”
அஜித்குமார்
10 ஆண்டுகளுக்கு முன்பாகவே சமூக வலைதளங்களின் வளர்ச்சியைக் கணித்து, மிகவும் தெளிவாக இந்த முடிவை எடுத்துள்ளார் அஜித். முடிவுகளை எடுப்பது சுலபம். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும், அதற்கான உழைப்பைக் கொடுப்பதிலும்தான் வெற்றியே அடங்கியுள்ளது. அந்த வகையில் அஜித் அடைந்திருக்கும் வெற்றி சாதாரணமானது அல்ல. இன்றைய தினம் நடுத்தர வயதுமிக்க காமன்மேன்' ஒருவரை நிறுத்தி ``அஜித்தைப் பற்றி என்ன நினைக்கறீங்க ?’' என்று கேட்டால், ``நல்ல மனுஷன்… அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருக்கார். நெறைய பேருக்கு ஹெல்ப் பண்ணியிருக்கார்… தேவையில்லாம எந்த பாலிடிக்ஸும், பிரச்னையும் பண்றது இல்லை’' என்பார். தமிழ் நடிகர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே இதுபோன்றஇமேஜ்’ இருக்கும். அவர்களில் அஜித் முதன்மையானவராக, `தல’-யாக உயர்ந்து நிற்கிறார். ஆம்… இதுதான் இந்த பத்து ஆண்டுகளில் அஜித்தின் ரசிகர் மன்ற கலைப்பு முடிவுக்கும், அவரது உழைப்புக்கும், தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட சாதூர்யத்துக்கும் கிடைத்த வெற்றிி.

திரைப்படங்களில் நடிப்பது, படங்களின் வெற்றி என அந்தப் புகழால் மட்டுமே ஒருவருக்கு இப்படியான இமேஜ்’ கிடைத்து விடாது. முதலமைச்சருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், ''எங்களுக்கு அரசியல் வேண்டாம் ஐயா…” என்று அவரிடமே நேரடியாக கோரிக்கை வைத்தபோது ஒட்டுமொத்த தமிழகமும் அஜித்தைத் திரும்பிப் பார்த்தது. அதைத் தொடர்ந்து ரசிகர் மன்றத்தைக் கலைத்தபோது இன்னும் அதிர்ச்சியாகப் பார்த்தது. மங்காத்தாவில்ஸ்கெட்ச்’ போட்டு விளையாடியதைப் போலவே நிஜ வாழ்விலும் தன்னை செதுக்க ஆரம்பித்தார் அஜித். அதே சமயம் மங்காத்தா'வுக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானபில்லா -2′ ரசிகர்களுக்குத் திருப்தி அளிக்காமல் போனது.

வீரம்' படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், புனேவில் இருந்து சென்னைக்கு பைக்கில் பறந்து வந்தார் அஜித். 19 மணி நேரத்தில் 1,350 கி.மீ பயணம். சாலையோர கடைகளில் தேநீரும், உணவும் அருந்திய புகைப்படங்கள் வைரலாகின. கொஞ்சம் சுதாரித்து கவனமாக செயல்பட ஆரம்பித்தார். அதன் பிறகுதான் ஆரம்பம் படத்தின் பணிகள் தொடங்கின. அந்த சமயத்தில்ஜிம்’ -மில் இருந்து வொர்க்-அவுட் செய்த பிறகு, அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. ஃபிட்டான அஜித்தைப் பார்த்து வியந்தது கோடம்பாக்கம். படத்துக்குப் பெயரே சூட்டப்படாமல் ஆரம்பம்’ படத்தின் டீஸர் வெளியாகி பரபரப்பாக்கிது.தல’ என்றால் கெத்து எனச் சமூக வலைதளங்களில் முழு வீச்சில் செயல்பட்டனர் அஜித் ரசிகர்கள். பிற நடிகர்களின் ரசிகர்கள் சுதாரித்து வருவதற்குள் அஜித் ரசிகர்களின் வளர்ச்சி மின்னல் வேகத்தில் பயணித்தது.

`இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் இந்தி வெர்ஷனில் அமிதாப் நடித்த கெஸ்ட் ரோலுக்கு தமிழில் நடிக்க அஜித்தை அணுகினார் ஸ்ரீதேவி. யோசிக்காமல் உடனே நடித்துக் கொடுத்தார் அஜித். கெஸ்ட் ரோலாக இருந்தாலும் பார்த்தே தீருவோம் என்று திரையரங்குகளுக்குப் படை எடுத்தனர் ரசிகர்கள். சில நிமிடங்களே வந்தாலும் அஜித்தின் அழகான தமிழ் உச்சரிப்பும், தன்னம்பிக்கை கொடுக்கும் பாத்திர வடிவமைப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக பெண்கள் மிகவும் ரசித்தனர்.

வீரம்’ படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், புனேவில் இருந்து சென்னைக்கு பைக்கில் பறந்து வந்தார் அஜித். 19 மணி நேரத்தில் 1,350 கி.மீ பயணம். சாலையோரக் கடைகளில் தேநீரும், உணவும் அருந்திய புகைப்படங்கள் வைரலாகின. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக தனது பயணத்தை மக்களுக்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார். இது சமூக வலைதளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகவும் ஆனது. மக்களிடம் அவரது இமேஜ்’ சென்றடைந்தது.வீரம்’ படமும் பெரும் வெற்றிபெற்றது. பல வருடங்கள் கழித்து, ரொமான்டிக்கான' அஜித்தை அப்படத்தில் பார்க்க முடிந்தது. பொங்கல் விடுமுறை நாள்கள் என்பதால் குடும்பங்கள் சகிதம் திரையங்கில் குவிந்தனர். அடுத்து வந்தஎன்னை அறிந்தால்’ படமும் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆர்ப்பாட்டமில்லாத, அழகான, பொறுப்பான போலீஸ் அப்பாவாக ரசிக்க வைத்தார் அஜித்.

கார் ரேஸ், ஏரோ மாடலிங் எனப் பல துறைகளில் விருப்பம் இருந்தாலும் அவற்றை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தினார் அஜித். சென்னை எம்.ஐ.டி மாணவர்களுடன் இணைந்து ஆளில்லா குட்டி விமானங்களை உருவாக்கும் பணிகளில் ஆலோசகராகவும், டெஸ்ட் பைலட்டாகவும் செயல்பட்டார். ஒரு நடிகன் ஆசிரியர் ஆனார் என்று அந்தத் தகவலும் மக்களை வியப்பாகப் பார்க்க வைத்தது. அந்தக் குட்டி விமானம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தது. கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள்.

வீரம்' படத்துக்குப் பிறகு சிவாவுடன் இணைந்து செய்தவேதாளம்’ உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, தமிழக தியேட்டர்களைத் தெறிக்க விட்டது. 2015 கன மழையிலும் `வேதாளம்’ படத்தின் வசூல் மழை குறையவில்லை!

இந்த பத்தாண்டில் வீரம்' –ஜில்லா’, வேதாளம்' –தூங்காவனம்’, விஸ்வாசம்' –பேட்ட’ என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் போட்டியிட்ட போதெல்லாம் அஜித்தின் கையே ஓங்கியிருந்தது.

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்துகொண்டு, எனக்கு இன்னொரு திறமையும் இருக்கிறது என்று மலைக்க வைத்தார். செல்ல மகளுடன் பள்ளியில் டயர்’ ஓட்டி விளையாடியதை தமிழக குடும்பங்கள் அனைத்துமே பார்த்திருக்கும். எல்லாவற்றையும்விட, ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் சமைத்துப் பரிமாறும்பிரியாணி’ சக நடிகர்களால் வியந்து பாராட்டப்பட்டுக்கொண்டே இருந்தது.

இப்படி, தான் ஒரு நடிகனாக மட்டுமே அல்லாமல் பல துறைகளில் சிறந்தவன் என்பதையும், ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு ரோல் மாடல்’ எனவும் மக்கள் மனதில் பதிய வைத்தார். இடைப்பட்ட இந்த ஒன்பது ஆண்டுகளில்மங்காத்தா’, ஆரம்பம்',வீரம்’, என்னை அறிந்தால்',வேதாளம்’, விஸ்வாசம்',நேர்கொண்ட பார்வை’ என அவரது அனைத்துப் படங்களும் (பில்லா -2' மற்றும்விவேகம்’ விதிவிலக்குகள் ) வெற்றிப் படங்களாகவும் அமைந்தன. முந்தைய பத்து ஆண்டுகளில் தவறவிட்ட ஃபேமிலி ஆடியன்ஸைப் பிடித்துவிட்டார். நடிகராக மட்டுமே அல்லாமல் `நல்ல மனிதர்’ என்ற வகையிலும்்.

ரஜினிகாந்த்தின் பேட்ட' படத்துடன் மோதியவிஸ்வாசம்’ தமிழகத்தில் மாபெரும் வெற்றியடைந்து, `பேட்ட’யை விஞ்சிய தகவல் உலகம் முழுக்க உள்ள தமிழ் சினிமா ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது. குடும்பம் குடும்பமாக அஜித் படத்தைப் பார்க்க வந்தார்கள் தமிழக மக்கள். அது ‘நேர்கொண்ட பார்வை’யிலும் தொடர்ந்தது.

இந்த பத்தாண்டில் வீரம்' –ஜில்லா’, வேதாளம்' –தூங்காவனம்’, விஸ்வாசம்' –பேட்ட’ என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் போட்டியிட்டபோதெல்லாம் அஜித்தின் கையே ஓங்கியிருந்தது. திரையுலகமும் அதை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தன்னுடன் நடிக்கும் புதுமுக நடிகர்களுக்கும் அறிவுரையும் நல் வழியையும் காட்டி உதவுபவர் அஜித் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சிறிய நடிகர் முதல் டெக்னிஷியன் வரை மரியாதையுடன் பழகுபவர்.

தான் சொன்னபடியே மக்களிடம் நன்மதிப்புடன் உயர்ந்து நிற்கிறார் அஜித். அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றி விட்டார். அதுபோலவே ஒவ்வொரு அஜித் ரசிகரும் பொது மக்களின் பார்வையில் கண்ணியமானவர்களாக செயல்பட வேண்டும் என்பதே அவரின் விருப்பம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version