December 7, 2025, 1:47 PM
28.4 C
Chennai

பனிக்கட்டியால் கட்டப்பட்ட உணவகம்!

Igloo Cafe5 - 2025

பனிக் கட்டிக் குடில் அல்லது இக்லூ (Igloo) என்பது பனிக்கட்டிகளைக் கொண்டு கட்டப்படும் வீடுகளாகும்

இவை பார்ப்பதற்கு இது அரைக்கோள வடிவம் கொண்டதாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் இது பரவளையவுரு (paraboloid) வடிவம் கொண்டது.

Igloo Cafe - 2025

இந்த வடிவம் பனிகட்டிகள் ஒன்றோடொன்று வலுவாக இணைந்து இருப்பதற்கு உதவுகிறது. பனிக்கட்டிகள் வெப்பத்தை கடத்தாத தன்மை கொண்டிருப்பதால், ஆச்சரியப்படத்தக்க வகையில் இக்லூக்களின் உட்பகுதி இதமானதாக இருக்கும்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் பனிக்கட்டிகளால் கட்டப்பட்ட Igloo Cafe, அந்த யூனியன் பிரதேசத்தில் புதிய சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.

Igloo Cafe6 - 2025

ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில் உள்ள புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டில் ‘Snowglu’ என்ற பெயரிடப்பட்ட இந்த உணவகம் 37.5 அடி உயரமும் 44.5 அடி விட்டமும் கொண்டது.

Igloo Cafe உணவகத்தை உருவாக்கிய சையத் வாசிம் ஷா, இது உலகின் மிகப்பெரிய கஃபே என்று கூறினார். “சில ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்தில் இது போன்ற ஒரு உணவகத்தை பார்த்தேன்.

Igloo Cafe1 - 2025

அங்கு தூங்கும் வசதிகளுடன் கூடிய அத்தகைய ஹோட்டல்களைக் காணலாம். மிக அதிக அளவு பனிப்பொழிவு ஏற்படும் குல்மார்க் பகுதியில், சுவிட்சர்லாந்தைப் போல் ஏன் தொடங்கக்கூடாது என்று எண்ணியதாக ஷா கூறினார்.

Igloo Cafe2 - 2025

கடந்த ஆண்டும் இதே போன்று இக்லூ கஃபே ஒன்றை உருவாக்கியதாகவும், இது ஆசியாவிலேயே மிகப்பெரியது என்றும் கூறினார். “இந்த ஆண்டு, நான் உலகின் மிக உயர்ந்த கபேயை உருவாக்கினேன் என்றார்

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின்படி மிகப்பெரிய இக்லூ கஃபே சுவிட்சர்லாந்தில் இருப்பதாகவும், அதன் உயரம் 33.8 அடி மற்றும் விட்டம் 42.4 அடி என்றும் அவர் கூறினார். “எனவே, இப்போது நான் அமைத்துள்ளது, அதை விட பெரியது,” ஷா மேலும் கூறினார்.

Igloo Cafe3 - 2025

கடந்த ஆண்டு ஓட்டலில் நான்கு டேபிள்கள் இருந்ததாகவும், ஒரே நேரத்தில் 16 பேர் மட்டுமே சாப்பிடலாம் என்றும், ஆனால் இந்த ஆண்டு 10 டேபிள்களை அமைத்துள்ளதாகவும், ஒரே நேரத்தில் நாற்பது பேர் என்றும் அவர் கூறினார்.

இக்ளூ கட்டும் பணியில், 25 பேர் இரவும் பகலும் வேலை செய்து, 64 நாட்கள் ஆனது எனவும் திட்டத்தை முடிக்க 1,700 மனித நாட்கள் தேவை என்று ஷா கூறினார்.

Igloo Cafe4 - 2025

“பனியினால் ஆன இந்த இக்ளூன் ஐந்தடி தடிமன் கொண்டது. இது மார்ச் 15 வரை நீடிக்கும் என்று நம்புகிறோம் “என்று அவர் கூறினார். உள்ளூர் மக்கள் மற்றும் ரிசார்ட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு மையமாக இந்த கஃபே மாறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Entertainment News

Popular Categories