December 7, 2025, 8:24 PM
26.2 C
Chennai

சொன்னது என்ன செய்தது என்ன?.. தினமும் விடிகிறது நல்லாட்சியைக் காணோம்: ஓங்கி அடித்த ஓபிஎஸ்!

ops - 2025

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களை நேற்றிரவு அறிமுகம் செய்து வைத்து ஆலோசனை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், ‘“தமிழகத்தில், எத்தனையோ அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன.

ஆனால், அரசியல் வரலாற்றில் தடம் பதித்த ஒரு இயக்கம் உண்டென்று சொன்னால், அ.தி.மு.க-தான் என்பதனை நம்மை வளர்த்து ஆளாக்கிய இருபெறும் தலைவர்களும் பதிவு செய்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் 1972-ல் அ.தி.மு.க இயக்கத்தை தோற்றுவித்தார். நாடு போற்றும் நல்லாட்சி தந்த முதலமைச்சராக தன்னிறைவுத் திட்டங்களையும் அவர் நடைமுறைப்படுத்தினார்.

அம்மா அவர்களும் 21 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்து தொலை நோக்குத் திட்டங்களைக் கொண்டுவந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தெரு தெருவாக… வீதி வீதியாகப் பரப்புரை செய்து, மக்களை நம்ப வைத்து, ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். தி.மு.க-வின் 10 மாத கால ஆட்சி, ‘மக்கள் விரோத’ ஆட்சியாக உருமாறியிருக்கிறது. வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

மகளிர்க்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். தந்தார்களா…? இல்லையே! ஆட்சிக்கு வந்தவுடன் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதாக சொன்னார்கள். இன்றைக்கு என்ன நடக்கிறது?

நீட் தேர்வுக்கு அஸ்திவாரம் போட்டதே தி.மு.க-தான். 2010-ல் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி ஆட்சி… மத்தியில் இருந்தபோது, இரு அவைகளிலும் தி.மு.க-வைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவரான காந்திராஜன்தான் அந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியவர். இவ்வளவுப் பெரிய துரோகத்தை செய்துவிட்டு பகல் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்
அவர்கள் போட்ட விதையால்தான் தமிழக ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவுப் பறிப்போயிருக்கிறது.

அதை எண்ணிதான் அம்மா மறைவுக்குப்பின்னால் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு கொடுத்தோம். வருடத்துக்கு அரசுப் பள்ளியிலிருந்து 51 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற காலம்போய், உள் ஒதுக்கீட்டால் 531 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

தமிழக கவர்னரை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் பெயரில் கூத்துக் கட்டுகிறார்கள். தி.மு.க-வுக்கு நிர்வாகத்திறமை இல்லை. விளம்பர நிர்வாகம் செய்கிறார்கள்.

505 வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. தமிழக மக்களிடம் வசமாக மாட்டிக்கொண்டார்கள். அம்மா ஆட்சியில், பொங்கல் பண்டிகையை இனிப்புடன் கொண்டாடுவதற்காக அரிசியுடன் முந்திரி பருப்பு, கரும்பு, 100 ரூபாய் பணம் கொடுத்தார்.

பின்னர், 500, 1000 ரூபாய் எனப் பொங்கல் பணம் உயர்த்திக் கொடுக்கப்பட்டது. அம்மாவிற்குப் பின்னர் நாங்கள் 2,500 ரூபாய் கொடுத்தோம்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், ‘2,500 ரூபாய் போதாது. 5,000 ரூபாயாக உயர்த்திக்கொடுக்கச்’ சொன்னார்.

ஆட்சிக்கு வந்த இவர்கள் ஒரு ரூபாய்க்கூட கொடுக்கவில்லை. ஸ்டாலின் வரப்போறாரு. விடியல் தரப்போறாரு என்றார்கள். தினமும் விடிகிறதே தவிர நல்லாட்சியைக் காணோம்.

முதலமைச்சர் ஸ்டாலின்
பொங்கல் தொகுப்புப் பையை பிரித்துப் பார்த்தால், கூட்டாஞ்சோறு மாதிரி கலந்துவைத்திருக்கிறார்கள். வெல்லம் ஒழுகிறது. பப்பாளி விதையை எதுக்குக் கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை.
மோசமான அரிசி.

‘தமிழ் தமிழ்’ என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அனைத்துப் பொருள்களையும் வடநாட்டிலிருந்து கொள்முதல் செய்திருக்கிறார்கள்.

ஏன், தமிழ்நாட்டில் விவசாயிகளே இல்லையா? இவர்கள் கொடுத்த தரம் குறைந்த பொங்கல் பொருள்களை மனிதர்கள் சாப்பிட முடியாது.

அதனை சமைத்து மாட்டுக்கு உணவாகக் கொடுத்தால், மாடுகளுமே முறைக்கின்றன. அந்த அளவுக்கு ஒரு அவலமான ஆட்சி நடக்கிறது. தி.மு.க-வினர் கல்நெஞ்சம் கொண்டவர்கள்.

அதேபோல, அ.தி.மு.க என்ற பேரியகத்தை கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர் ஜனனீ சதீஷ்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories