ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை பட்டு வஸ்திரம் மதுரை கள்ளழகருக்கு சென்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் களைந்த மலர்மாலை, கிளி, பட்டு வஸ்திரம் ஆகிய மங்களப்பொருட்களை சித்திரா பெளர்ணமி அன்று மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் இறங்கும் கள்ளழகர் அணிந்து கொண்டு இறங்குவார்.
அதே போல் இந்த ஆண்டு மதுரை வைகை ஆற்றில் சித்ரா பௌர்ணமி அன்று தங்க குதிரையில் அமர்ந்து ஆற்றில் இறங்கும் கள்ளழகர் அணிவதற்காக ஆண்டாள் சூடிக் களைந்த பட்டு, கிளி ,மலர்மாலை ஆகியவை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நேற்று கொண்டு செல்லும் வைபவம் நடைபெற்றது.
மங்கல பொருள்களை ராஜா பட்டர் கொண்டு சென்றார் . ஆண்டாளுக்கு முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா கோயில் செயல் அலுவலர் (கூ.பொ) லட்சுமணன் அறங்காவலர் குழு உறுப்பினர் நளாயினி கோவில் ஸ்தானிகர் ரங்கராஜன் என்ற ரமேஷ் கிச்சப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் செயல் அலுவலர் (கூ.பொ) லட்சுமணன் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.