42ம் நாள்: ஐபிஎல் 2024 – 01.05.2024
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
சென்னை அணியை (162/7, ருதுராஜ் கெய்க்வாட் 62, அஜிங்க்யா ரஹானே 29, சமீர் ரிஸ்வி 21, மொயீன் அலி 15, தோனி 14, ஹர் பிரீத் ப்ரார் 2/17, ராஹுல் சாஹார் 2/16) பஞ்சாப் அணி (17.5 ஓவர்களில் 163/3, ஜானி பெயர்ஸ்டோ 46, ரிலீ ரோஸ்கோ 43, சாம் கரண் 26*, ஷஷாங்க் சிங் 25*, பிர்ப்சிம்ரன் சிங் 13) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் சென்னை அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான அஜிங்க்யா ரஹானே (24 பந்துகளில் 29 ரன், 5 ஃபோர்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (48 பந்துகளில் 62 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். ரஹானே 8.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த பந்தில் ஷிவம் துபே அவுட்டானார். அதற்கடுத்த பந்தில் ஷிவம் துபே கோல்டன் டக் வாங்கி அவுட்டானார்.
அவருக்குப்பின்னால் விளையாட வந்த ஜதேஜா 4 பந்துகளில் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் ஆடவந்த சமீர் ரிஸ்வி (23 பந்துகளில் 21 ரன்), மொயீன் அலி (9 பந்துகளில் 15 ரன்), எம். எஸ். தோனி (11 பந்துகளில் 14 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சென்னை அணி இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்திருந்தது.
163 ரன் என்ற சற்றே கடின இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரப் சிம்ரன் சிங் மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜானி பெயர்ஸ்டோ (30 பந்துகளில் 46 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) மூன்றாவதாகக் களம் இறங்கிய ரிலீ ரோஸ்கோ (23 பந்துகளில் 43 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.
அதன் பின்னர் ஆடவந்த ஷஷாங்க் சிங் (ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 25 ரன்) மற்றும் சாம் கரண் (ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 26 ரன்) இருவரும் நன்றாக ஆடி பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். அந்த அணி 17.5 ஓவரிலேயே 3 விக்கட் இழப்பிற்கு 163 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் போட்ட்களில் சென்னை அணியை தொடர்ந்து ஐந்தாவது முறையாக பஞ்சாப் அணி வென்றிருக்கிறது.
பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிரார் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
01.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
ராஜஸ்தான் | 9 | 8 | 1 | 16 | 0.694 |
கொல்கொத்தா | 9 | 6 | 3 | 12 | 1.096 |
லக்னோ | 10 | 6 | 4 | 12 | 0.094 |
சென்னை | 10 | 5 | 5 | 10 | 0.627 |
ஹைதராபாத் | 9 | 5 | 4 | 10 | 0.075 |
டெல்லி | 11 | 5 | 6 | 10 | -0.442 |
பஞ்சாப் | 10 | 4 | 6 | 8 | -0.062 |
குஜராத் | 10 | 4 | 6 | 8 | -1.113 |
மும்பை | 10 | 3 | 7 | 6 | -0.272 |
பெங்களூரு | 10 | 3 | 7 | 6 | -0.415 |