கேள்வி– அயல்நாட்டு உறவுகளைப் பற்றிப் பேசும் போது, வளைகுடா நாடுகளோடு குறிப்பாக நமது உறவுகள் பலப்பட்டிருக்கின்றன. இது உங்களுடைய தனிப்பட்ட ஆர்வம் மற்றும் உறவு மட்டுமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. உங்களுக்கு விருதுகளும் வழங்கி கௌரவித்தார்கள். கிழக்கு ஆசியாவாகட்டும், மேற்கு ஆசியாவாகட்டும், இதிலே ஆளுமைரீதியான விஷயங்கள் எத்தனை முக்கியமானவை, தனிப்பட்ட ரீதியில் அந்த நாடுகளின் தலைவர்களோடு நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட உறவுகள் எந்த அளவுக்கு ஆளுமைரீதியான அரசியல் இதில் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள்?
பதில் – நான் என்ன நினைக்கிறேன் என்றால், இதிலே….. வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம்…. அவை சரியாகவும் இருக்கலாம் கருத்துக்கள் உறுதியானவை. அதை ஆளுமை எனலாம், அல்லது, தனிப்பட்ட உறவுகள் எனலாம். இதிலே மிக அதிகமாக, நான் கவனம் செலுத்துவதில்லை ஆனால் உறவுகள் பலமாக இருக்கின்றன.
என்னுடைய கருத்து என்னவென்றால், நமது ராஜதந்திரம் நெறிமுறைகளில் சிக்கியிருந்தால், நம்மால் செயல்படவே முடியாது. ராஜதந்திரத்தின் பலமும் கூட, நெறிமுறைக்கப்பாற்பட்டும் இருக்கிறது, நெறிமுறைகளில் மட்டுமே என்று இல்லை. நெறிமுறைகளில் பொருத்தமான நிலை அதிகம் இருக்கும் முதலில் யார் வருவார்கள் எதை யார் கொண்டு வருவார்கள் இவற்றைச் சுற்றியே அமைந்திருக்கும்.
நான் துவக்கம் முதலிலேயே என்ன பார்த்தேன்… என்றால், நான் சபதமேற்ற வேளையிலே, மிக சுவாரசியமான விஷயம். நான் ஏழு சார்க் நாடுகளையும் அழைப்பேன் என்று தீர்மானித்தேன்.
ஆமாம் 2014இலே முதன்முறையாக நான் பதவியேற்ற போது. ஏழு நாடுகளையும் அழைக்க வேண்டும் என்ற கருத்து என் மனதில் தோன்றியது. இதற்கான காரணம் தேர்தல் பிரச்சாரங்களின் போது என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்றால், மோதி மாநிலத்திலிருந்து வந்திருக்கிறார், இவருக்கு ராஜதந்திரம் ஒன்றும் தெரியாது, அயலுறவு என்ன தெரியும் என்பது தான். மோசம் என்று நினைத்தார்கள்.
தேர்தல் பிரச்சாரங்களில் எனக்கு எதிராக பேசப்பட்ட விஷயங்களில் இது முக்கியமான ஒன்று என்னை கேலி செய்தார்கள். என்னுடைய முக்கிய செயல்பாடு மூலம் பதில் சொல்ல வேண்டும் என்று எனக்குப் பட்டது, பேசத் தேவையே இல்லை. (சிரிப்புடன்) ஆக நான் சபதமேற்பு விழாவிலே, ஏழு நாடுகளை அழைத்தேன். அதற்கு முன்பாக நான் திரைக்குப் பின்னால் அவர்களிடத்தில், சம்மதம் வாங்கி விட்டேன்.
திடீரென்று ஒன்றும் எல்லாம் நடந்து விடவில்லை. அனைவரும் வந்தார்கள். நான் சபதமேற்றேன். அயலுறவுத்துறை அமைச்சர் அப்போது பதவி ஏற்கவில்லை. எனக்கு இந்த அனைத்து விஷயங்களுமே மிகவும் புதியவை. அவை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் அனைவரோடும் பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
நாங்கள் ஹைதராபாத் இல்லம் சென்ற போது, ப்ரோடோகால் தெரிந்தவர்கள் அவர்கள் வருவார்கள் இப்படிச் செய்யுங்கள் என்று எல்லாம் எனக்கு வழிகாட்டினார்கள். அவர்கள், வருகை நேரம் ஆன போது அவர்களை அழைக்க நான் வெளியே செல்கிறேன் என்றேன். அப்போது அமைப்பு முழுவதும் ஆடிப் போனது, நம்முடைய பிரதம மந்திரி, அழைக்க வாசலுக்குச் செல்வதா?
அயலுறவுத் துறையின் ப்ரோட்டோகால் உலகைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு முதல் நாளே மிக விசித்திரமாக அமைந்தது. ஆனால் எனக்கோ அந்த ஒரு செயல்பாடு, அனைத்துக் கதவுகளையும் திறந்து விட்டது.
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன். அதில் எனக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்