― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏன்.? உயர் நீதிமன்றம் கேள்வி

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏன்.? உயர் நீதிமன்றம் கேள்வி

12 July31 high courtதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. powered by Rubicon Project தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

அதன்பின் உள்ளாட்சி தேர்தலை சென்று வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. அதன்பின் மீண்டும் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் அவமதிப்பு வழங்கு தொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. எப்போது தேர்தல் நடத்தப்படும், எப்போது வாக்கு எண்ணிக்கை, எப்போது வேட்புமனுத்தாக்கல் உள்ளிட்ட அனைத்து தேதியையும் பட்டியலிட்டு அனுப்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்து உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version