― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ஏர்டெல் நிறுவனத்தின் ஏமாற்று வேலை? : நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம்.!

ஏர்டெல் நிறுவனத்தின் ஏமாற்று வேலை? : நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம்.!

ஏர்டெல் ப்ரீபெயிட் 4G சிம்கார்ட் வைத்திருப்போர், 52122 என்கிற எண்ணுக்கு கால் செய்தால்,1GB இலவச 4G டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அந்த நிறுவனம் இலவசமாக தருவதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

*அதன் அடிப்படையில் பெரும்பாலான ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 52122 கால் செய்தவுடன் 1 GB இலவச 4G டேட்டாவை கொடுத்துவிட்டு அடுத்த 10 நிமிடத்திலேயே தவறுதலாக அந்த டேட்டாவை அந்த நிறுவனம் எடுத்து கொ(ல்)ள்கிறதாம்.*

1 GB இலவச டேட்டா குறித்து ஏர்டெல் அனுப்பிய எஸ்எம்எஸ் தகவல் என கூறப்படுவதாவது :

Congrats! You have been credited with Free 1GB 4G data, valid for 28 days. Ensure you switch network settings to 4G/LTE to experience high-speed internet on India’s widest 4G network. To check balance, dial *121*2# Due to some technical issue, you were wrongly credited 1GB in your 4G DA. The same has been reversed.

இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் வணிக ரீதியிலான காரணத்திற்காக பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் அவர்களது வணிகத்தை பெருக்கும் நோக்கில் தொடர்ந்து இடையூறு அளித்து வருகிறதாம்.

ஏர்டெல் நிறுவனம் கொடுத்து வரும் இடையூறு தொடர்பாக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு. “எனது கைப்பேசி எண்ணுக்கு டு நாட் டிஸ்டரப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ளேன். எனவே வணிக ரீதியிலான காரணத்திற்காக உங்களது நிறுவனமும் கைப்பேசி வாயிலாக சட்டப்படி இடையூறு அளிக்க கூடாது” என பலர் கூறினாலும் ஏர்டெல் நிறுவனம் அதைக் கண்டு கொள்வதில்லையாம்.

கைப்பேசி இணைப்பு வழங்கியுள்ள எந்த ஒரு நிறுவனமும் வாடிக்கையாளர் எனும் முறையில் கூட டு நாட் டிஸ்டர்ப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியிலான காரணத்திற்காக கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் இடையூறு அளிக்க சட்டத்தில் இடம் இல்லையாம்.

டு நாட் டிஸ்டரப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியிலான காரணத்திற்காக கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் இடையூறு அளிக்கும் கைப்பேசி இனைப்பு வழங்கியுள்ள எந்த நிறுவனத்தின் மீதும் மேற்படி காரணத்திற்காக அந்த நிறுவனத்தின் மீது இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம் என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version