Category: சற்றுமுன்

  • தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 உயர்வு

    சென்னை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 3 அதிகரித்து ரூ. 2,666 என்ற அளவிலும், சவரன் ஒன்றுக்கு ரூ. 24 உயர்ந்து ரூ. 21,328 என்ற அளவிலும் உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 3 அதிகரித்து ரூ. 2,851 என்ற அளவில் உள்ளது. சில்லரை வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ. 43.40 என்ற அளவிலும்,…

  • சவுதி மன்னர் மரணம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு!

    சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மறைவை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்ற பிற எண்ணெய் வள நாடுகளின் கோரிக்கையை சவுதி அரேபியா ஏற்கவில்லை. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவில் இருந்து வந்தது. இந்நிலையில், மன்னரின் மரணத்தை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பான சவுதி அரேபியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கலாம் என்று சந்தைகளில் யூகம் எழுந்துள்ளது. இதையடுத்தே கச்சா எண்ணெய் விலை…

  • மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புதிய உச்சம்

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் இன்று அதிக பட்ச அளவாக 29364 புள்ளிகள் என்ற நிலையில் புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 8800 புள்ளிகளுக்கு மேலாகச் சென்று 8855 என்ற புள்ளிகளில் வர்த்தகம் துவங்கியது.   Sensex opens at record high of 29364 points, NIfty above 8800 points at 8855 #marketopen #breaking pic.twitter.com/dHG6UmkpxD — FirstBiz (@FirstpostBiz) January 23,…

  • ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வு

    மும்பை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.61.56-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 6காசுகள் உயர்ந்து ரூ.61.63-ஆக இருந்தது

  • சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகள் கடந்து சாதனை

    மும்பை இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. இன்று வர்த்தக நேரம் துவங்கியதும் துவக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 124.02 புள்ளிகள் உயர்ந்து 29,012.88 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 25.15 புள்ளிகள் உயர்ந்து 8,754.65 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது, உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு…

  • ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டி

    ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் க.அண்ணாத்துரை போட்டியிடுகிறார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

  • முன்னாள் உதவியாளர் கைது: கருணாநிதியுடன் தயாநிதி மாறன் திடீர் சந்திப்பு

    சென்னை: தனது முன்னாள் உதவியாளர், சன் டிவி ஊழியர்கள் இருவர் கைது விவகாரத்தை அடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதியை, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இன்று காலை சந்தித்து பேசினார். தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 300க்கும் அதிகமான உயர் வேக தொலைபேசி இணைப்புகளை அவரது சகோதரர் கலாநிதிமாறனின் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தயாநிதி மாறனின் கூடுதல்…

  • தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் உள்பட 3 பேர் கைது

    சன் டிவிக்கு முறைகேடாக நவீன தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த கெளதமன், சன் டி.வி. ஊழியர்கள் என மூன்று பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சன் டிவிக்கு முறைகேடாக நவீன தொலைபேசி இணைப்பு வழங்கிய வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள். சன் டிவியின் உயர் பதவிகளில் இருந்தவர்களிடமும் சிபிஐ விசாரித்து வந்தது.…

  • ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா காணொளி மூலம் பிரசாரம்: அதிமுக திட்டம்?

    ஸ்ரீரங்கம் தொகுதியில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் பேச்சுகளை பதிவு செய்து, காணொளி, எல்சிடி திரைகள் மூலம் தொகுதி மூழுவதும் ஒளிபரப்பு செய்து பிரசாரத்தில் ஈடுபட அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரின் முதல்வர் பதவியும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியும் பறிபோனது. இதன் காரணமாக, ஸ்ரீரங்கத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.…

  • ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: தொடக்க நாளில் மனுதாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்

    ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்றே, அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.வளர்மதி வேட்புமனு தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் காதர்மொய்தீனிடம் தனது வேட்பு மனுவை அவர் அளித்தார். வரும் 27-ஆம் தேதி, வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதற்கு மறுநாள் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப் பெற 30-ஆம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 13-ஆம் தேதியும், வாக்கு…