சவுதி மன்னர் மரணம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு!

சற்றுமுன்

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மறைவை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்ற பிற எண்ணெய் வள நாடுகளின் கோரிக்கையை சவுதி அரேபியா ஏற்கவில்லை. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவில் இருந்து வந்தது. இந்நிலையில், மன்னரின் மரணத்தை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பான சவுதி அரேபியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கலாம் என்று சந்தைகளில் யூகம் எழுந்துள்ளது. இதையடுத்தே கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3.1 சதவிகிதமும் ஆசிய சந்தையில் 1.58 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.