சென்னை: திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ்த் துறை நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கு மூலம் நச்சுக் கருத்தை பதிய விடக் கூடாது என்று கூறியிருக்கிறார் மாநில கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
மேலும், கல்லூரியின் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உள்நுழையும் என்றும், இது போன்ற கொச்சைப் படுத்தும் அவமானப்படுத்தும் கருத்துகளுடன் கூடிய கருத்தரங்கள் இனிமேலும் நடக்காமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்த அவரது டிவிட்டர் பதிவில்,
TN Govt will intervene with the College concerned and ensure this derogatory & slanderous seminar does not happen ! பெண்களை மகிமைப் படுத்தும் எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் தமிழில் நிறைந்து நிற்கையில், தமிழ்ப் பண்பாடு பெண்களை தாழ்த்தி வைத்தது என்ற நஞ்சுக் கருத்தினை பதிய விடக்கூடாது !
TN Govt will intervene with the College concerned and ensure this derogatory & slanderous seminar does not happen ! பெண்களை மகிமைப் படுத்தும் எண்ணற்ற இலக்கியப்படைப்புகள் தமிழில் நிறைந்து நிற்கையில், தமிழ்ப்பண்பாடு பெண்களை தாழ்த்தி வைத்தது என்ற நஞ்சுக் கருத்தினை பதிய விடக்கூடாது !
— Pandiarajan K (@mafoikprajan) November 24, 2018
– என்று தெரிவித்துள்ளார். ஆனால், தெளிவாக, இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று அவர் குறிப்பிடவில்லை. அதனை அவர் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த விவகாரத்தில் ஆளுநரும் தமிழக அரசும் தலையிட வேண்டும் என்று நமது தமிழ் தினசரியில் முன் வைத்த வேண்டுகோளுடன் கூடிய முழு விவரக் கட்டுரை… கல்விச்சாலையா கலவிச்சாக்கடையா? தமிழ் இலக்கியப் படுகொலை செய்யும் திருச்சி ஜோசப் கல்லூரி நிர்வாகத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை தேவை!