ஒரத்த நாடு அருகே அமைச்சர்களை முற்றுகையிட்டு சாலைமறியல்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல் வீடியோ

ஒரத்தநாடு அருகே மின்சாரம் வழங்காததை கண்டித்து அமைச்சர்களை முற்றுகையிட்டு சாலை மறியல் …

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடில் மின்சார ஊழியர்கள் 4 நாட்களாக வேலை பார்த்தனர்… இந்நிலையில் பணிகளை முடிக்காமல் அவர்களை அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்… இதனால் தென்னமநாடு கிராம மக்கள் தவித்து வருகின்றனர்… எனவே உடனடியாக மின் ஊழியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் மின்சாரத்தை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒரத்தநாடு தஞ்சாவூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்… அப்போது அவ்வழியே வந்த அமைச்சர் செங்கோட்டையன், எம்பி வைத்திலிங்கம் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்… பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.