கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

Published:

rajasekar2

ஆங்க்ரி யெங் மேன் டாக்டர் ராஜசேகரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். அவருடைய பெண்களான சிவானி, சிவாத்மிகா இருவரும் கொரோனாவில் இருந்து நலம் பெற்று திரும்பி விட்டார்கள்.

ஆனால் ஹீரோ ராஜசேகர் மற்றும் அவருடைய மனைவி ஜீவிதா இன்னும் கொரோனாவில் இருந்து விடுபடவில்லை. ராஜசேகரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அண்மையில் அவருடைய பெண் சிவாத்மிகா ட்விட் செய்துள்ளார்.

shivathmika-rajasekar
shivathmika-rajasekar

தன் தந்தை விரைவில் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ரசிகர்களை பிரார்த்தனை செய்யும்படி கேட்டுள்ளார்.

கொரோனாவோடு அப்பாவின் போராட்டம் மிகவும் கவலையாக உள்ளது. ஆனாலும் அவர் மிகவும் தீவிரமாக போராடி வருகிறார். உங்கள் அன்பும் பிரார்த்தனையும் எங்களை காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.

rajasekar1
rajasekar1

அப்பா விரைவில் நலமடைய வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கோருகிறேன். உங்கள் அன்பாலும் அபிமானத்தாலும் அவர் விரைவில் உடல் நலம் பெற்று வெளி வருவார் என்று டுவிட் செய்துள்ளார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

என் தந்தை கொரோனாவோடு போராடுகின்ற விஷயம் உண்மைதான். ஆனால் அவருடைய ஆரோக்கியம் நிலையாகவே உள்ளது. மெதுவாக உடல் நலம் தேறி வருகிறார். உங்கள் பிரார்த்தனையும் அன்பும் எங்களுக்கு மிகவும் தேவை. அவருடைய ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டாம். தயவு செய்து ஃபேக் நியூஸ் பரப்ப வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று அவர் மறு ட்வீட் செய்துள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img