அறநிலையத்துறையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு, ஆட்கள் பற்றாக்குறை காரணம் இல்லை.. அவர்களிடம் இருக்கும் நேர்மையின்மையே என்று அடித்துக் கூறுகிறார் ஹெச்.ராஜா.
ஹிந்து சமய அறநிலையத்துறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. இது குறித்து அவர் அண்மையில் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “
அறநிலையத்துறை முறைகேடுகளுக்கு காரணம் ஆள் பற்றாக்குறை அல்ல. நேர்மையின்மையே. pic.twitter.com/GeV5slB3fO
— H Raja (@HRajaBJP) September 24, 2018
அறநிலையத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை என்று அறிக்கையில் கூறப் பட்ட காரணத்தை மறுத்துள்ள ஹெச்.ராஜா, இதற்கு நேர்மையின்மையே காரணம் என்று கூறுகிறார்.
மேலும், இஸ்லாமியருக்கு வக்ஃப் வாரியம் உள்ளது போல், ஹிந்து ஆலயங்களை நிர்வகிக்க இந்து மத ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்தியங்கும் வாரியம் அமைத்து, அதனிடம் ஹிந்து ஆலயங்களை ஒப்படைப்பது ஒன்றே சிறந்த வழி என்று கூறியுள்ளார்.
இந்து ஆலயங்களை காத்திட வக்ஃப் வாரியம் உள்ளதுபோல் இந்து மத நம்பிக்கை கொண்ட ஆன்றோர், சான்றோர் அடங்கிய தனித்தியங்கும் வாரியத்திடம் இந்து ஆலயங்களை ஒப்படைப்பது ஒன்றே வழி. pic.twitter.com/dnMmMZie41
— H Raja (@HRajaBJP) September 23, 2018




