ஒபாமாவுடன் மோடியின் ரேடியோ நிகழ்ச்சி – மன் கி பாத்

இந்தியா

புதுதில்லி இந்தியா வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 27ம் தேதி, பிரதமர் மோடியுடன் சேர்ந்து, ரேடியோவில் பேசுகிறார். கடந்த மே மாதம் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, அக்டோபர் முதல், ‘மன் கீ பாத்’ என்ற பெயரில், தன் மனதில் தோன்றும் எண்ணத்தை  நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதற்காக, ரேடியோவில் பேசி வருகிறார்; அதை, நாடு முழுவதும் உள்ள, ‘ஆல் இந்தியா ரேடியோ’ நிலையங்கள் ஒலிபரப்பி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் என்ன விஷயங்களை மோடி பேச வேண்டும் என, பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம்; மோடியின் இணைய தளத்தில் அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க, 25ம் தேதி இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, 27ம் தேதி, மோடியுடன் இணைந்து ரேடியோவில் பேச உள்ளார். இந்தத் தகவலை, பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். ‘டுவிட்டர்’ இணையதளத்தில் மோடி, ’27ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு மன் கீ பாத் ரேடியோ நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, அதிபர் ஒபாமாவுடன் நானும் பேசுகிறேன்’ என, தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.