சட்டமன்றத்தில் 100 ஐக் கடந்த திமுக., உறுப்பினர் பலம்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

stalin out assembly2 - 2026

திமுக எம்எல்ஏக்கள் 13 பேர் இன்று பதவியேற்றுள்ளனர். இதை அடுத்து சட்டப்பேரவையில் திமுக.,வின் பலம் 101 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் இன்று பேரவைத் தலைவர் அறையில் பதவியேற்றனர். இவர்களுக்கு பேரவைத் தலைவர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.

திமுகவைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் பதவியேற்ற பின்னர், சட்டப்பேரவையில் 88 ஆக இருந்த திமுக.,வின் உறுப்பினர் பலம் நூறைக் கடந்துள்ளது. தற்போது திமுக., பலம் 101 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பதவியேற்றுக் கொண்ட 13 எம்எல்ஏக்கள்…
1. ஓட்டப்பிடாரம் – சண்முகையா
2. திருப்பரங்குன்றம் – சரவணன்
3. அரவக்குறிச்சி – செந்தில் பாலாஜி
4. திருவாரூர் – பூண்டி கலைவாணன்
5. ஓசூர் – சத்யா
6. ஆண்டிப்பட்டி – மகாராஜன்
7. ஆம்பூர் – வில்வநாதன்
8. தஞ்சை – நீலமேகம்
9. பெரம்பூர் – சேகர்
10. குடியாத்தம் – காத்தவராயன்
11. பெரியகுளம் – சரவணகுமார்
12. பூந்தமல்லி – கிருஷ்ணசாமி
13. திருப்போரூர் – இதயவர்மன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.