பாபநாசம் அணை நீர்மட்டம் 9 அடியாக குறைந்தது   மீன்கள் செத்து மிதக்கும் பரிதாபம்….!

DAM - 2026

தமிழகம் முழுவது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் போதிய மழையின்மை மற்றும் கொளுத்தும் வெயிலால் திருநெல்வேலியின் மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கி வரும் பாபநாசம் அணை நீர்மட்டம் 9 அடியாக குறைந்தது. இதன் காரணமாக குறைந்த அளவு உள்ள நீரில் உள்ள மீன்கள் பரிதாபமாக செத்து மிதக்கின்றன.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.

100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருந்த போதிலும் இந்த ஆண்டின் கோடை தாக்குதல் மற்றும் கோடை மழை பெய்யாததால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்டு போய்விட்டன.

இதனால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை. அதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 11 அணைகள் உள்ளன. இதில் பிரதான அணையான பாபநாசம் அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 143 அடி ஆகும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 9 அடியாக குறைந்தது.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வறட்சியின் கோரப்பிடியில் பாபநாசம் அணை சிக்கி தவித்து வருகிறது.

அணையின் தற்போதைய நீர்மட்டம் 9 அடியாக குறைந்துள்ள போதிலும் அணை இதுநாள் வரைக்கும் தூர்வாரப்படாததால் சில அடி உயரத்துக்கு சகதி நிரம்பி கிடக்கிறது.

கொளுத்தும் வெயிலால் அணையில் தேங்கி கிடக்கும் தண்ணீருக்குள் ஏற்பட்டிருக்கும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மீன்கள் கொத்து கொத்தாக பரிதாபமாக செத்து மிதக்கின்றன.

அதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 47.31 அடியாக உள்ளது.

மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 118 அடியாகும். நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.48 அடியாக உள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories