railway news - 2026

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சற்றுமுன் சென்னை நெல்லை பொது தகவல்கள்
railway news - 2026
#image_title

சென்னை எழும்பூர் வர வேண்டிய பொதிகை நெல்லை உட்பட சில ரயில்களில் ஏப்ரலிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌ தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக செய்யப்பட்ட மாற்றங்கள் ஏப்ரல் இறுதி மற்றும் மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை சென்னை எழும்பூர் இராமேஸ்வரம்
போட் மெயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு மீண்டும் புறப்படும் எந்த தேதியும் கிடையாது மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை தான் இயங்கும்.

ஹைதராபாத் தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்பட்டு புறப்படும் .எந்த தேதியும் கிடையாது மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரை வரை தான் இயங்கும்.

ஏப்ரல் 6 முதல் 21 வரை திருநெல்வேலி சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
.சென்னை எழும்பூர் திருநெல்வேலி மார்க்கத்தில் எந்த மாற்றமும் கிடையாது
சென்னை எழும்பூர் செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 7 முதல் 22 வரை தாம்பரத்தில் புறப்பட்டு செங்கோட்டை செல்லும் செங்கோட்டைச் சென்னை எழும்பூர் மார்க்கத்தில் எந்த மாற்றமும் இல்லை .

போட் மெயில் எக்ஸ்பிரஸ் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் . ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் சென்னை பீச் கடற்கரை நிலையம் வரை இயக்கப்படும் .

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌ தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.