December 6, 2025, 5:35 AM
24.9 C
Chennai

மோடியின் உண்மை முகம் தெரிய வேண்டுமா? இதைப் படியுங்க…!

modi tea20140212 630 630 - 2025

“லுட்டியன்ஸ்”என்ற ஊடக நிபுணர்கள்’ – இன்று,  மோடியை…  சிலர் தவறாக புரிந்து கொள்வதற்கு காரணம் இவர்கள் தான்.

இதுவரை இருந்த அனைத்து பிரதம மந்திரிகள்…  மற்றும்  எதிர்க் கட்சித் தலைவர்களும்…  இவர்களுடைய கைப்பாவையாகவே இருந்து வந்துள்ளனர்.

இதில்  வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களும் அடக்கம். இவர்கள் எப்படி பட்டவர்கள்…?’ 2014க்கு முன்பு, புது டெல்லியின் மையப்பகுதியில் கோலோச்சி வந்தனர்.

தங்களை மாபெரும் மேதாவிகளாக காட்டிக் கொண்டு… ஊடக பலத்தை ஆயுதமாக கொண்டு…  மத்திய அரசு இயந்திரத்தை தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு… ஆட்சியாளர்களை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்ற புரோக்கர்கள் (இடைத்தரகர்கள்) தான் இந்த ‘லுட்டியன்ஸ்…’!

இவர்களை பகைத்துக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. காரணம்… இவர்கள் தான் பிரதம மந்திரி மற்றும் உப மந்திரிகள் அனைவரின் திட்டங்களையும்… இந்தியா மற்றும்  உலக நாடுகள் அனைத்திற்கும் எடுத்துச் செல்லக்கூடிய…  திறன் படைத்த ஊடக நிபுணர்கள். இவர்களுடைய ஊடக தொடர்புகள் மிகவும் பலம் வாய்ந்தது.

அதனால் தான்,  அனைத்து அரசு துறைகளும் தங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அளவுக்கும் கடந்த 70 ஆண்டுகளில் மாற்றி அமைத்து இருந்தனர். இதன் மூலம்,
அவர்கள் காலம் காலமாக… டெல்லியின் மையப்பகுதியிலேயே… மிகவும் வசதி படைத்த அரசு பங்களாக்களில்… பல வசதிகளுடன்… மத்திய அரசின் செலவினங்களிலேயே வாழ்ந்து வந்தனர்.

மோடி பிரதமராக பதவி ஏற்றவுடன் (18-05-2014)… முதல் வேலையாக இந்த லுட்டியன்ஸ்கள் அனைவரின் தேவைகளும் அறவே நீக்கப்பட்டன. அதிர்ச்சி அடைந்த லுட்டியன்ஸ்,  தங்கள் ஊடக பலத்தை கொண்டு… அரசு அலுவலகத்தில் மூக்கை நுழைக்க முயற்சி செய்தனர்.

ஆனால், பிரதமர் அலுவலகம் அவர்களை புறந்தள்ளியது. அது மட்டுமல்லாமல்,
அவர்கள் அனுபவித்து வந்த அரசு பங்களாக்கள் அனைத்தையும் உடனடியாக காலி செய்யவும் உத்தரவிட்டது.

இதுவரை தங்கள் கண் பார்வையில் ஆடிக்கொண்டிருந்த பிரதம மந்திரிகள் போல் மோடி இல்லாமல்… மிகுந்த துணிச்சல்காரராகவும், சிறந்த நிர்வாகியாகவும் இருந்ததால்… இவர்களுக்கு ‘இடைத்தரகு’ வேலை அறவே இல்லாமல் போயிற்று. மேலும்,  ஒரு பிரதம மந்திரி வெளிநாடு செல்லும் பொழுது…

‘ஜெர்னலிஸ்ட்’ என்ற போர்வையில் லுட்டியன்ஸ்களின் பெரும் படையே ராஜ மரியாதையுடன் விமானம் முழுவதும் ஏற்றிக் கொண்டு பயணம் செய்தனர். அவர்களது முழு விமான செலவு மற்றும் தங்கும் செலவுகள் என அனைத்தையும் அரசு ஏற்றுக் கொள்ளும். இந்த முறை,  மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து… இவை அனைத்தும் நீக்கப்பட்டன. மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் பொழுது… Journalist வர விரும்பினால்… அவர்களுடைய சொந்த செலவிலேயே அழைத்துச் செல்லப் பட்டார்கள். அதனால் அவருடன் செல்லும் பெரும்படை கட்டுப்படுத்தப்பட்டது.

இதனால் கோபம் கொண்ட அனைத்து லுட்டியன்ஸ்களும்… எல்லா விதமான ‘தவறான கருத்துக்கள்’ மற்றும் ‘மோடி பற்றிய எதிர்மறையான எண்ணங்களை’  மக்களின் மத்தியில் கடந்த ஐந்தாண்டுகளாக ஊடகங்கள் மூலம் விதைத்துக் கொண்டே இருந்தனர். ஆனால்,  மோடி அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

மோடிக்கு முன்பு,  ‘தினம் ஒரு பிரஸ்மீட்’ என்ற அளவிலாவது ஒவ்வொரு அமைச்சகமும் அவர்களை உபயோகப்படுத்தி வந்த நிலையில்… அவை அனைத்தையும் கட்டுப்படுத்தி, மக்களை நேரடியாக சந்திக்கும் “மாங்கி பாத்”  மற்றும்
‘பல வீடியோ கான்ஃப்ரன்சிங்’ முறைகளை தொடர்ச்சியாக பின்பற்றி… மக்களை முடிந்தவரை நேரடி தொடர்பில் வைத்துக் கொண்டார் மோடி.

இவ்வாறு தான்,  நாட்டின் தேவையற்ற… பல ஆடம்பர செலவினங்களை கட்டுப் படுத்தி… இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்ந்தி… இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்து உள்ளார் மோடி. ‘இந்துத்துவா, இந்துத்துவா’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூறி… ‘பிரிவினை’ பேசும் எதிர்க்கட்சிகளும்,  மாற்று கட்சினர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்… மோடி கொண்டு வந்த எந்த ஒரு திட்டமும்… ‘இது இந்துக்களுக்கு மட்டும்தான்’, ‘இது முஸ்லிம்களுக்கு மட்டும் தான்,’ ‘இது கிருத்துவர்களுக்கு மட்டும் தான்,’  என்று  பாகுபாடு காட்டிய துண்டா…?

தங்களின் சுயநலம் கருதி… மீண்டும் கொள்ளையடிக்க வழிகளைத் தேடும்… மாற்று கட்சியினர் மற்றும் தலைவர்கள்… பொதுமக்களாகிய நம்மையிடையே,  ‘பிரித்தாலும் சூழ்ச்சி’யை மேற்கொள்கிறார்கள். நாம் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். நம் அனைத்து குழந்தைகள் நன்மைக்காகவே மோடி அவர்கள் போராடுகிறார் என்ற உண்மையை உணரவும்.

ராகுல், ஸ்டாலின்  மற்றும்  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ராஜபுத்திரர்களின் அத்தியாயம் முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். ஏனெனில்,
அவர்கள் நமக்கானவர்கள் அல்ல. ‘அவர்கள், அவர்களுக்காணவர்கள் மட்டும் தான்’ என்பதை நாம் தெளிவாக புரிந்து கொண்டாலே போதும்.

சுயநலம் கருதாத…  நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ‘சிறப்பான நிர்வாகம்’ தரும் திறமைமிக்க… ‘மோடி’ போன்ற தலைவர்கள் நமக்கு இப்போது கிடைத்திப்பது அரிதிலும் அரிது. ஆகவே, நாம் மோடி அவர்களுக்கு நமது ஆதரவை எப்போதும் முழுமையாக அளித்து நாடும், நாமு‌ம் பல நன்மைகளை அடைவோம்.

– பாமரன்

2 COMMENTS

  1. STILL JOURNALISTS OF SOME KIND ARE SO NARROW MINDED AND ANTI HUMAN ANTI NATIONALS ?
    MODIGI IS EXPECTED TO CURE THEIR MELODIES WITH PROPER REMEDIES ,
    ONLY HE IS FIT FOR THE OPERATION !
    HOPE TO BE DONE EARLIEST THE BRTTER FOR NEW INDIA I SUPPOSE …
    Sivagnanam 28.05.2019

  2. லூடியென்ஸ்களின் லூட்டியை தாங்க முடியாம தான் திரு மோடி அவர்களின் பியூஸை பிடுங்கி விட்டார். ஊடக நண்பர்கள் அரசு செயற்பாட்டையும் தலைவர்களின் பயணங்களையும் கவர் செய்ய வேண்டியது அவசியம் தான். ஆனால் அரசு பணத்தில் புகுந்து விளையாடினார்கள். எனவே தான் மோடி எல்லாவற்றையும் niruthuvittar.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories