கம்பு சாதம்
தேவையான பொருட்கள்
கம்பு – 1 கிண்ணம்
தண்ணீர் – 2 1/2 கிண்ணம்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
கம்பை நன்றாக கழுவி கொள்ளவும்.
1 கிண்ணம் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் 4 அல்லது 5 முறை சுற்றி எடுக்கவும். உடைத்த ரவைபோல ஆகிவிடும். இது கம்பு வேகமாக வெந்துவிட பயன்படும்.
உடைத்த கம்பை மீதமுள்ள 1.5 கிண்ணம் தண்ணீரையும் சேர்த்து, உப்பு போட்டு குக்கரில் 4-5 விசில்கள் விட்டு எடுக்கவும். குக்கர் சூடு ஆறிய பின்னர் வெளியில் எடுக்கவும். அரிசி வேகவைப்பதைவிட சற்று அதிக நேரம் வேகவிட வேண்டும்.
கம்பு சாதம் தயார்!