பிலவ புத்தாண்டு வாழ்த்து அந்தாதி
புத்தாண்டு பூத்ததுவே புன்மைகள் போக்கிடவே
போகட்டும் துன்பங்கள் பொல்லாத நல்குரவு
நல்லவைதாம் ஓங்கட்டும் மாயட்டும் தீமைகள்
தீதில்லா இன்பங்கள் திக்கெட்டும் சூழட்டும்
சூழ்ந்திடட்டும் புத்துணர்வு வீழ்ந்திடட்டும் சோம்பலது
சோர்வில்லா பேராற்றல் சேரட்டும் யாவருள்ளும்
யாவருக்கும் நம்பிக்கை நல்லுயர்வை நல்கட்டும்
நன்றியுடன் தெய்வத்தை நானிலத்தார் போற்றட்டும்
போற்றிபோற்றி புத்தாக்கம் போட்டியெல்லாம் வென்றிடுவோம்
வெற்றியெல்லாம் தாய்நாட்டின் தாளிணையில் அர்ப்பணிப்போம்
அர்ச்சிப்போம் சேவையால் மேதினியின் மேன்மைக்கே…
மேலோர்கள் மெச்சிடவே வாழ்ந்திடுவோம் புத்தாண்டில்.
- கவிதை: பத்மன்
நனà¯à®±à®¿à®•à®³à¯.