அப்போது அவரிடம் பால் விலை குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் அளித்த பேட்டியில், பால் விலை உயர்வு என்பது ஏழை மக்களை பாதிக்ககூடியது. இதனை ஒரு போதும் ஏற்கமுடியாது. ஆதலால் உடனடியாக பால்விலை உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என கூறினார்.
அந்த கருத்துக்கு பதிலாக டிடிவி தினகரன் கூறியிருப்பது, ‘மக்கள் விருப்பத்திற்கேற்ப மாவட்டத்தை பிரிப்பதால் அந்த மக்களுக்கு வளர்ச்சிதான் ஏற்படும். இதில் எந்த தவறுமில்லை, லஞ்சம், ஊழலை மறைக்கவே மாவட்டத்தை பிரிப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். அது பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல தான்’ என கூறினார்.